இன்னொருத்தரோட ஓடி போய்ட்டா எப்படி..? மனைவியின் தலைமுடியை கச்சக் கச்சக்னு வெட்டி தள்ளிய கணவர்..! பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள்...!

thenmozhi g   | Asianet News
Published : Feb 05, 2020, 06:33 PM IST
இன்னொருத்தரோட ஓடி போய்ட்டா எப்படி..? மனைவியின் தலைமுடியை கச்சக் கச்சக்னு  வெட்டி தள்ளிய கணவர்..! பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள்...!

சுருக்கம்

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வருபவர் ஆரிஃப். இவரது மனைவி பெயர் ரோஷினி. இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகாலம் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருவது இயல்பாக இருந்து உள்ளது.  

இன்னொருத்தரோட ஓடி போய்ட்டா எப்படி..? மனைவியின் தலைமுடியை கச்சக் கச்சக்னு  வெட்டி தள்ளிய கணவர்..! பிறகு நடந்ததை நீங்களே பாருங்கள்...! 

மனைவி தன்னை விட அழகாக இருப்பதால் இரவு தூங்கும் போது தலை முடியை வெட்டிய    கணவனை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் வசித்து வருபவர் ஆரிஃப். இவரது மனைவி பெயர் ரோஷினி. இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகாலம் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருவது இயல்பாக இருந்து உள்ளது.

மேலும் ரோஷனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து உள்ளார் கணவர். மேலும் தன்னைவிட ரோஷினி அழகாக இருப்பதாகவும் தன் மனதிற்குள் போட்டு குழப்பம் அடைந்து உள்ளார். இதன் காரணமாக அழகாக இருப்பதால்தான் வேறு ஒருவருடன் தொடர்வில் இருக்கிறாள் என எண்ணிய கணவர் ரோஷினி இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு தெரியாமல் அவரது தலைமுடியை வெட்டி உள்ளார். பின்னர் அவரை ஓர் அறையில் வைத்து பூட்டி வெளியே எங்கும் செல்லக்கூடாது என துன்புறுத்தியுள்ளார். 

மேலும் சந்தேகம் வரும் போதெல்லாம் மனைவியை அடித்து துன்புறுத்தல் செய்துள்ளார். இப்படியே சென்றுகொண்டிருக்கும் போது நேற்று ஆரிப் வேலைக்கு சென்றவுடன் தனது நண்பர்களின் உதவியால் வீட்டின் கதவை உடைத்து வெளியே வந்துள்ளார் ரோஷினி. பின்னர் நேரடியாக காவல்நிலையம் சென்று நடந்த முழு விவரத்தையும் தெரிவிக்கவே இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது போலீசார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்