உங்களுக்கு செட்டே ஆகாதவர்களை எப்படி ஈஸியா கண்டுபிடிக்கிறது..? இந்த 4 டிப்ஸ் உங்களுக்கு உதவும் - ட்ரை பண்ணுங்க!

By Ansgar R  |  First Published Aug 24, 2023, 2:36 PM IST

உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்து பயணிக்கும் அனைவருமே உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவி விடுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் உங்களுடன் இருப்பதனாலேயே நீங்கள் பெரிய துயரங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.


நெகட்டிவ் எனர்ஜி..

நம்மோடு பயணிக்கும் பலர் பேசும் விஷயங்கள் அனைத்துமே எதிர்மறையான கருத்துக்களை கூறுவதாக இருக்கும். எனவே அவர்களுடைய நட்பை தவிர்ப்பதும், அவர்களிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. காரணம் இவர்கள் நீங்கள் எந்த உச்சத்தை அடைய வேண்டும் என்று நினைத்தாலும், அது குறித்த ஏதோ ஒரு எதிர்மறை எண்ணத்தை உங்களுக்குள் செலுத்திக் கொண்டே இருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களை நீங்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

Latest Videos

undefined

பிறர் பற்றி புறம் பேசுபவர்கள்..

அந்த நபருடன் நீ பழகாதே, அவர் நல்லவர் அல்ல, தீயவர்.. என்று நமக்கு தவறான நபர்கள் குறித்து அடையாளம்காட்டும், பல நல்ல உறவுகள் நம்மோடு இருக்கும் அதே நேரத்தில். பிறரை பற்றி எப்பொழுதுமே தவறாக பேசும் சில ஆசாமிகளும் நம்முடன் வளம் வருவார்கள். பொதுவாக இவர்கள் அனைவரை பற்றியும் புறம் பேசிக் கொண்டே இருப்பார்கள். உதாரணமாக நம்மிடையே பிறரை பற்றியும், பிறரிடையே நம்மைப் பற்றியும் புறம் பேசுவார்கள், இவர்களையும் தவிர்த்து வாழ்வது சிறந்தது.

தங்களிடம் உள்ள செல்வத்தைப் பற்றி புகழ் பாடுபவர்கள்..

தனது மூதாதையர்கள் சேர்த்து வைத்த சொத்தை பயன்படுத்தி செல்வந்தர்களாக உள்ள சிலர், தங்களிடம் உள்ள பொருட்செல்வத்தைப் பற்றி எப்போதும் புகழ் பாடிக் கொண்டே இருப்பார்கள். ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய துவங்கினாலே, அந்த விஷயத்தை, தான் பெரிய அளவில் தன்னிடம் உள்ள பொருளை கொண்டு செய்து முடித்து விட முடியும் என்று கூறுவார்கள். நிச்சயம் இதுபோன்ற நபர்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களிடமிருந்து விலகிய இருப்பது உங்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறரை தாழ்த்தி உயர நினைப்பவர்கள்..

தான் வளர வேண்டும் என்பதற்காக பிறரை அவமானப்படுத்தவும், அவர்களுக்கு வரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கவும் செய்பவர்கள் இவர்கள். இவர்களுடன் நாம் இருக்கும் பொழுது நம்மைப் பற்றி அவர்கள் புகழ்ந்து பேசும் அதே நேரம், நம்மை கீழே தள்ளி மேலே உயர மட்டும் தான் அவர்கள் நினைப்பார்கள். ஆகவே இவர்களிடம் இருந்தும் விலகி இருப்பது மிகவும் நல்லது.

உங்கள் துணை இப்படி நடந்துகொண்டால் கவனிக்காம இருக்காதீங்க.. டாக்ஸிக் உறவின் அறிகுறிகள் இவை தான்..

click me!