பளபளன்னு மின்னும் முகம் வேணுமா? ...கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

Published : Feb 26, 2025, 06:54 PM IST
பளபளன்னு மின்னும் முகம் வேணுமா? ...கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

சுருக்கம்

அனைத்து நோய்களுக்கும் தீர்வாக கற்றாழை விளங்குவதாக மருத்துவம் சொல்கிறது. இதை சாப்பிட்டாலும், ஜூஸ் செய்து குடித்தாலும் கண் பார்வை, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் நன்மை தருவதாக சொல்லப்படுகிறது. இந்த கற்றாழையை முக அழகிற்காக, தோல் பராமரிப்பிற்காக எப்படி பயன்படுத்த வேண்டும்? பளபளக்கும் முக அழகை பெற கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

கற்றாழை (Aloe Vera) ஒரு அற்புத மூலிகை ஆகும்.  இது பலவிதமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், முகத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் மாற்ற உதவுகிறது. கற்றாழை பூஞ்சை, முகப்பரு, கரும்புள்ளி, சன் பர்ன் மற்றும் சரும கருமை போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. பளபளவென மின்னும் அழகான முகம் வேணும், அதுவும் செலவே இல்லாமல் வீட்டிலேயே, இயற்கையான முறையில் கிடைக்கிறது என்றால் யாருக்கும் தான் வேண்டாம் என சொல்ல மனசு வரும். நீங்களும் இதை ஒரு முறை டிரை பண்ணி பாருங்க. 

கற்றாழையில் உள்ள சத்துக்கள் :

அமினோ அமிலங்கள் – சருமத்தை புதுப்பிக்க உதவும்.
வைட்டமின்கள் ஏ,சி, ஈ – முகத்தை பாதுகாத்து, அழகாக வைத்திருக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடென்ட் – வயதான தோற்றத்தை தாமதிக்க செய்கிறது.
குளிர்ச்சி தரும் தன்மை – முகத்தின் எரிச்சலை குறைக்க உதவுகிறது.

முகப்பருவை குறைக்க கற்றாழை Face Pack :

முகப்பரு, கரும்புள்ளிகள் நீங்க, கற்றாழை ,  வேப்பிலை,  கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து செய்யும் ஃபேஸ்பேக் சிறப்பானது.

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்
1/2 ஸ்பூன் நிம்பப் பொடி
ஒரு சிறிய சிட்டிகை கஸ்தூரி மஞ்சள்

செய்முறை:

அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள்.
15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
வாரத்தில் 2 முறை செய்தால், முகப்பரு குறைந்து, முகம் பளபளப்பாகும்

பளபளப்பான, மென்மையான சருமத்திற்கு Face Pack : 

இதில் கற்றாழை, வெள்ளரிக்காய் , பால் சேர்ப்பதால், சருமம் மிகவும் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

தேவையானவை:

2 ஸ்பூன் கற்றாழை ஜெல்
1 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு
1/2 ஸ்பூன் பசும்பால்

செய்முறை:

மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.
இதை தினசரி செய்தால், முகம் இயற்கையாக பளபளப்பாகும்

Sunburn குறைக்க Aloe Vera Gel :

சூரிய வெப்பத்தால் தோல் எரிச்சலாக, சிவந்து போனால், கற்றாழை சிறந்த தீர்வாக இருக்கும்.

செய்முறை:

பனிக்கட்டியில் கற்றாழை ஜெல் சேர்த்து உறைய வைக்கவும்.
அதை முகத்தில் மெதுவாக தடவவும்.
10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

இது சூரிய சேதத்தைக் குறைத்து, முகத்துக்கு குளிர்ச்சியையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

கற்றாழை Face Pack பயன்படுத்தும் வழிமுறைகள் : 

* இயற்கையான, கற்றாழை பயன்படுத்துங்கள். பாட்டிலில் கிடைக்கும் Aloe Vera Gel-கள் சில நேரம் ரசாயனங்கள் கலந்திருக்கலாம்.
* Patch Test செய்யுங்கள் – உங்கள் சருமத்திற்கு பொருந்துமா என்று முதலில் கை மேல் பரிசோதிக்கவும்.
* தினமும் அல்லது வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்.
* கற்றாழையை அதிக நேரம் (அரை மணி நேரம் மேலாக) முகத்தில் வைத்திருக்க வேண்டாம்.
* சரும வகையைப் பொறுத்து பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். உலர் சருமத்திற்கு – கற்றாழை , தேன்;  எண்ணெய் சருமத்திற்கு – கற்றாழை,  * எலுமிச்சை ; மிகுந்த மெல்லிய சருமத்திற்கு – கற்றாழை, பசும்பால்

கற்றாழை சரும பராமரிப்பில் ஏன் முக்கியம்?

100% இயற்கையானது
ரசாயனமில்லாத அழகு முறை
எளிதாக வீட்டிலேயே செய்யலாம்
அனைத்து சரும வகைகளுக்கும் பொருந்தும்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?
Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!