
ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நீளமான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று விரும்புகிறாள். இதற்காக அவர்கள் பலவகையான விலை உயர்ந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதனால் முடி உதிர ஆரம்பித்து உலர்ந்து உயிரற்றதாகிவிடும். எனவே, இதற்கு பதிலாக சில வீட்டுக்கு பயன்படுத்தினால் பணம் வீணாகாது. மேலும், விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள். அது மட்டுமின்றி உங்கள் முடியும் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படும். அந்த வகையில் உங்கள் தலைமுடிக்கு வெந்தயத்தை பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பட்டுப் போன்ற கருப்பான அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலை பெறுவீர்கள்.
தலைமுடிக்கு வெந்தயத்தின் நன்மைகள்:
வெந்தயம் உங்கள் தலைமுடிக்கு அமிர்தம் போன்றது. இதில் இருக்கும் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது. இதனால் தலைமுடி பலமாகுவது மட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்சினை மற்றும் பொடுகு பிரச்சனையை நீக்கப்படுகிறது. மேலும் தலைமுடியில் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
வெந்தயத்தை தலை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?:
வெந்தயம் பேஸ்ட்:
வெந்தயத்தை தலை முடிக்கு மூன்று வலிகளில் பயன்படுத்தலாம்...முதலில், சிறிதளவு வெந்தயத்தை இரவு முழுவதும் நன்கு தண்ணீரில் ஊற வைத்து, பிறகு அதை காலையில் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை ஷாம்பு போடுவதற்கு முன் உங்கள் தலையில் 30 நிமிடங்கள் வைத்து பிறகு குளிக்கவும்.
இதையும் படிங்க: உங்கள் கூந்தல் கட்டுக்கடங்காமல் வளர இந்த ஒரு இலையில் ஹேர் மாஸ்க் போடுங்க..
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்:
இதற்கு தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சூடாக்கவும். பிறகு அந்த எண்ணெய் நன்கு ஆறியதும் அதை உங்கள் தலைமுடியில் தலைமை நன்கு மசாஜ் செய்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். நீங்கள் உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இப்படி செய்தால் உங்கள் தலைமுடி வலுவாக இருக்கும் மற்றும் நீளமாக வளரும்.
இதையும் படிங்க: 30 நாட்களில் உங்கள் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் கொட்டாமலும் வளர 'இத' பண்ணுங்க!
வெந்தயம் மற்றும் தயிர் :
வெந்தயம் மற்றும் தயிரை தலை முடிக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது இதற்கு வெந்தயத்தை இரவும் முழுவதும் ஊற வைத்து, காலையில் பேஸ்ட் செய்து, அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து பிறகு குளிக்கவும். இப்படி செய்து வந்தால் உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும், பட்டுப்போல மென்மையாகவும் மாறும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.