Latest Videos

Pani Puri: பானிபூரி பிரியர்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்; ஆபத்து காத்திருக்கிறது!!

By Kalai SelviFirst Published Jul 2, 2024, 2:59 PM IST
Highlights

Pani Puri Causes Cancer : பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பானிபூரி புற்றுநோய் போன்ற பயங்கரமான நோயை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்த முழுவிளக்கம் உள்ளே..

'பானி பூரி' என்ற பெயரை கேட்டாலே பலவது நாவில் எச்சில் ஊரும். நம்மில் பெரும்பாலானோர் பானி பூரியை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிலர் மாலை வேலையில் ஸ்நாக்ஸாக பானி பூரி சாப்பிட விரும்புகிறார்கள். இது இந்தியாவில் பல இடங்களில் தெருவோரங்களில் விற்கப்படுகிறது. நாம் அடிக்கடி பானி பூரியை மிகுந்த ஆர்வத்துடன் விரும்பி சாப்பிடுவோம். மேலும் இறுதியில் பானி பூரி கடைக்காரரிடம் கூடுதல் தண்ணீர் கூட கேட்டு அதையும் குடிப்போம். ஆனால், இப்படி மிகவும் விரும்பி சாப்பிடும் பானிபூரி புற்றுநோய் போன்ற பயங்கரமான நோயை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

ஆம், அதுதான் உண்மை. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் ஆய்வு ஒன்றினை நடத்தியது. ஆய்வில் கர்நாடகாவில் விற்கப்படும் பானி பூரி மாதிரிகளில் 22% பாதுகாப்பு தர நிலைகளில் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை… இதுதான் காரணம்!!

ஆய்வு என்ன சொல்லுகிறது?:
கர்நாடகாவில் இருந்து எடுக்கப்பட்ட 260 பாணி பூரி மாதிரிகளில் 41 செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாகவும், மீதமுள்ள 18 மாதிகளின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அது சாப்பிடுவதற்கு தகுதியில்லை என்றும் கண்டறிந்துள்ளனர்.

உணவு பாதுகாப்பு ஆணையம் சொல்வது என்ன?:
சாலை ஓரங்களில் விற்கப்படும் பானிபூரியின் தரம் குறித்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல புகார்கள் வந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அதன்படி, சாலையோர கடைகளில் இருந்து பெரிய உணவகங்கள் வரை பானிபூரியின் மாதிரிகளை எடுத்ததாகவும், அந்த மாதிரிகளில் பல பழையதாகவும், சாப்பிடுவதற்கு தகுதியற்றதாகவும் இருந்ததாக கண்டறிந்துள்ளனர். மேலும் கண்டறியப்பட்ட மாதிரிகளில், Brilliant Blue, Sunset Yellow, Tartrazine  போன்ற ரசாயனங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளன. அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படும்.

இதையும் படிங்க:  ஷாக்கிங் நியூஸ்.. பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. கதறும் பெற்றோர்..!

பானிபூரி தண்ணீர் கலப்படம் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?:
புளி தண்ணீர் வெளிர் நிறத்தில் இருக்கும். அதே சமயம் கொத்தமல்லி மற்றும் புதினா தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால், இதில் அமிலம் கலந்திருந்தால், உடனே வயிற்று வலி ஏற்படும் மற்றும் 
தண்ணீர் கசப்பாகவும் இருக்கும்.

ரோடமைன் - பி:
கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் போன்று உணவுகளில் பயன்படுத்தப்படும் உணவு நிறத்தை கர்நாடகா அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!