
சாம்பார் என்பது பொதுவாகவே எல்லோராலும் அதிகம் விருப்பப்பட்டு உட்கொள்ளும் ஒன்று என கூறலாம். ..
சாம்பாரில் பல வகைகள் உள்ளது ....அதுவும் கேரளா சாம்பாருக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதனை எப்படி செய்வது என்பதை பார்க்கலாமா....
கேரளா சாம்பார்
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு - 1 கப்,
கத்தரிக்காய் - 1,
முருங்கைக்காய் - 1,
உருளைக்கிழங்கு - 1,
வெள்ளைப் பூசணிக்காய் - 250 கிராம்,
வெண்டைக்காய் - 5,
தக்காளி - 2, உப்பு,
கொத்தமல்லி - தேவையானவை,
தேங்காய் எண்ணெய்- 1 மேசைக்கரண்டி,
கடுகு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சாம்பார் பவுடர் - 6 மேசைக்கரண்டி.
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பை கால் மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். காய்கறிகளைக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, பத்து நிமிடம் வேகவிடவும். இதனுடன் உப்பு, சாம்பார் பவுடரை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். பிறகு வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதனை சாம்பாரில் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.
ஆஹா என்ன ஒரு ருசி...நீங்களும் செய்து பாருங்கள்.....வித்தியாசத்தை உணருங்கள்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.