இரவு சப்பாத்திக்கு ஒன் டைம் கடாய் பன்னீர் கிரேவி செய்து சாப்பிடுங்க.. அடிக்கடி செய்வீங்க!!

By Kalai Selvi  |  First Published Jun 5, 2024, 8:00 PM IST

கடாய் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று இந்த கட்டுரை தெரிந்து கொள்ளலாம்.


இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போறீங்களா.? அதற்கு சைடு டிஷ்சாக என்ன செய்வது என்று தெரியவில்லையா...? உங்களுக்காக ஒரு சூப்பர் ரெசிபி நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அது என்ன என்று தெரிஞ்சுக்க இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

உங்க வீட்டில் பன்னீர் இருக்கா..? அப்படி இருந்தால் பன்னீரில் ஒரு டேஸ்டான கடாய் பன்னீர் செய்து சாப்பிடுங்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த கடாய் பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். இந்த கடாய் பன்னீர் கிரேவியை நீங்கள் சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண், கோதுமை பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக, பன்னீரில் கால்சியம் அதிகமாகவே உள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. சரி வாங்க இப்போது இந்த கடாய் பன்னீர் கிரேவி எப்படி செய்வது என்று இந்த கட்டுரை தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  எப்பவும் இட்லிக்கு தோசைக்கு சட்னி தானா..?! ஒருமுறை இந்த குருமா ட்ரை பண்ணுங்க.. அட்டகாசமாக இருக்கும்!

கடாய் பன்னீர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு 

மசாலாவிற்கு...
தக்காளி - 2
மல்லி - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2

இதையும் படிங்க:  இன்று டின்னருக்கு இந்த இன்ஸ்டன்ட் ரெசிபி செய்து பாருங்க.. சுவை சும்மா அள்ளும்!

செய்முறை: 
கடாய் பன்னீர் கிரேவி செய்ய முதலில்,  மசாலா ரெடி பண்ணுவதற்கு எடுத்து வைத்துள்ள தக்காளி மல்லி வரமிளகாய் ஆகியவற்றை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு அது ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் துண்டுகளாக வெட்டி வைத்த பன்னீரை அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். 

பிறகு அதே கடாயில் மீண்டும் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள் பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காய மற்றும் தக்காளியை சேர்த்து வதக்குங்கள் இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போன பிறகு அதில், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர் ரெடி பண்ணி வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு இதில் உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதன்பிறகு பொடியாக நறுக்கி வைத்த குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, இதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை நன்கு கிளறிவிட்டு பிறகு பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் கிரேவி தயார்!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!