இந்த கட்டுரையில், முட்டை பெப்பர் கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் முட்டை இருக்கா..? அப்படி ஒருவேளை இருந்தால், மதிய வேளையில் சூடான சாதத்துக்கு சைடு டிஷ் ஆக, முட்டை பெப்பர் கிரேவி செய்யுங்கள்.. இந்த முட்டை பெப்பர் கிரேவியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி மற்றும் பூரிக்கு வைத்து கூட சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும். மேலும், இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம். இந்த முட்டை பெப்பர் கிரேவியை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், முட்டை பெப்பர் கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
முட்டை பெப்பர் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
மல்லி - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
தேங்காய் - 3 ஸ்பூன் (துருவிய)
எண்ணெய் - தேவையான அளவு
undefined
கிரேவி செய்வதற்கு தேவையானது..
முட்டை - 4
சோம்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முட்டை பெப்பர் கிரேவி செய்ய முதலில், அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் தேவையான சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், எடுத்து வைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு கீழே இறக்கி ஆற வையுங்கள். அவை நன்கு ஆறியதும் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் மற்றும் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள். இப்போது அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் இன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்குங்கள். தக்காளி நன்கு வேந்ததும் இப்போது அதில் அரைத்து வைத்தால் மசாலா, உங்கள் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்குங்கள். அதன்பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வையுங்கள்.
இப்போது அதில் வேக வைத்த முட்டையை கீறிவிட்டு அதில் சேர்த்து மூடி வைத்த ஒரு 5 நிமிடம் கொதிக்க வையுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை அதன் மேல் தூவி இறக்கினால் அட்டகாசமான சுபையில் பெப்பர் முட்டை கிரேவி ரெடி.!!! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.