இந்த கட்டுரையில் கிரீன் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன் என்றாலே நம் அனைவரது நாவிலும் எச்சில் ஊரும். சிக்கனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிக்கனைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை நீங்கள்
சமைத்து சாப்பிடலாம். ஆனால், நீங்கள் க்ரீன் சிக்கன் கிரேவி செய்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் இந்த ரெசிபியை செய்யவில்லை என்றால் இந்த பதிவை உங்களுக்கானது தான்..
க்ரீன் சிக்கன் கிரேவி ஒரு சூப்பரான ரெசிபி. இந்த கிரேவியை நாண், சப்பாத்தி, புலாவ் மற்றும் சூடான சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும். இந்த கிரீன் சிக்கன் கிரேவியை உங்கள் வீட்டில் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.
உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், ஒருமுறை இந்த கிரேவி செய்து கொடுங்கள் சந்தோஷப்படுவார்கள். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் கிரீன் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இனி சிக்கன் வாங்கினா ஒன் டைம் இப்படி வெள்ளை குருமா செய்ங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்!
கிரீன் சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
சீரகப் பொடி - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
தயிர் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1/4 கப் (கெட்டியானது)
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மாசாலாவிற்கு...
கொத்தமல்லி - 1 கட்டு
புதினா - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 3
இஞ்சி - 1 1/2 துண்டு
பூண்டு - 7 பல்
இதையும் படிங்க: Chicken Recipe: ருசியான காரசாரமான ஆந்திரா சிக்கன் ஃபிரை செய்வது எப்படி?
செய்முறை:
கிரீன் சிக்கன் கிரேவி செய்ய முதலில், எடுத்து வைத்த சிக்கனை முதலில் தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளுங்கள். பிறகு அதில், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை நன்கு கையால் கிளறி விடுங்கள். பிறகு அதை அரை மணி நேரம் ஊற வையுங்கள். இப்போது மசாலாவிற்கு எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணியில் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் தயிர் மஞ்சள் தூள் மல்லித்தூள் சீரக பொடி கரம் மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து குறைந்தது 3 நிமிடம் கிளறி விடுங்கள். பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அதை மூடி வைத்து விடுங்கள். சிக்கன் நன்கு வேகம் வரை காத்திருங்கள். சிக்கன் நன்கு வெந்த பிறகு அதில் எடுத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து இரண்டு நிமிடம் மட்டுமே கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள். அவ்வளவுதான், இப்போது டேஸ்டான கிரீன் சிக்கன் கிரேவி ரெடி!!இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D