Tips underarm: அசௌகரியத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமை...மருத்துவ நிபுணர்களின் அட்வைஸ்...

Anija Kannan   | Asianet News
Published : Feb 26, 2022, 07:25 AM IST
Tips underarm: அசௌகரியத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமை...மருத்துவ நிபுணர்களின் அட்வைஸ்...

சுருக்கம்

இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள்  துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள்  துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும்.

கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில் மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

பிக்மென்டேஷன் ஒரு பொதுவான தோல் பிரச்சனை ஆனால் அதற்கு தீர்வுகளும் உள்ளன. இது தோலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நிறமாற்றம் மக்களை எரிச்சலடையச் செய்து அவர்களுக்கு லேசான சங்கடத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, இது அக்குளில் இருந்தால், சில ஆடைகளை அணிவதைத் தடுக்கலாம்.

“கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தோல் மருத்துவர் சில வழிமுறைகளை கூறுகின்றனர். 

சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.

சுவாரஸ்யமாக, முடி அகற்றும் நுட்பங்களான “ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங்” போன்றவை நமது உடலால் “காயங்களாக” பார்க்கப்படலாம். இதனால் குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான மெலனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இவை தவிர, எக்ஸ்ஃபாலியேஷன் செய்யாதது, உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக பிக்மென்டேஷன் ஏற்படலாம்.  

மற்ற காரணிகளில் இன்சுலின் எதிர்ப்பு, மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் ஷேவிங் செய்த பிறகு தோலில் எஞ்சியிருக்கும் பிக்மென்ட் ஆகியவை அடங்கும்.

தோல் மருத்துவரின் கூற்றுப்படி, அக்குள் பிக்மென்டேஷனை தடுக்க, பின்வருவனவற்றைச் செய்யலாம்.

1. வாசனை இல்லாத டியோடரண்டின் பிராண்டுக்கு மாறவும்

2. ரேசர்கள் எரிச்சலை ஏற்படுத்தும், எனவே நீங்கள் ஷேவ் செய்யும் போது, ​​அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

3. சன்ஸ்கிரீன், இந்த அதிசய தயாரிப்பு அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

4. தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகள் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

5. சுறுசுறுப்பாக இருங்கள், உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு ஆகியவை அக்குள் பிக்மென்டேஷனை குறைக்க உதவும்.

வீட்டு உபயோக குறிப்புகள்:

உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு போன்றவையும் பலன் அளிக்கும். வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை உருளைகிழங்கு மசியலில் பிசைந்து நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்