பற்களின் ஈறுகளில் இரத்தக் கசிவா...? பிரச்சனையை சரி செய்து ஈறுகளை உறுதியாக்கும் 6 வீட்டு குறிப்புகள்..!

Anija Kannan   | Asianet News
Published : Feb 26, 2022, 06:52 AM IST
பற்களின் ஈறுகளில் இரத்தக் கசிவா...? பிரச்சனையை சரி செய்து ஈறுகளை உறுதியாக்கும் 6 வீட்டு குறிப்புகள்..!

சுருக்கம்

Bleeding in the gums of teeth: முகத்தின் அழகை மெருகேற்றி காட்டுவதுவே சிரிப்புதான். அப்படி, சிரிப்பதற்கு தடையாக இருப்பது ஈறுகளின் இரத்தக்கசிவு அல்லது புண் பிரச்சனை தான். 

முகத்தின் அழகை மெருகேற்றி காட்டுவது சிரிப்புதான். அப்படி, நாம் அழகாக சிரிப்பதற்கு தடையாக இருப்பது ஈறுகளின் இரத்தக்கசிவு அல்லது புண் பிரச்சனை தான். 

பற்கள் ஆரோக்கியமாக இல்லை, பலவீனமாக உள்ளதெனில் இரத்தக் கசிவு ஏற்படும். எனவேதான் சிலருக்கு பிரெஷ் கொண்டு பல் துலங்கினாலே இரத்தக் கசிவு ஏற்படும். இல்லையெனில் வைட்டமின் k குறைபாடு, ஈறுகளில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, அதிக புகையிலை உட்கொள்ளுதல், சத்தான உணவுகளை தவிர்த்தல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். எனவே அது சாதாரணமாக விஷயமாகக் கருதாமல் உடனடி தீர்வு காண்பது அவசியம்.

முக அழகை போற்றி பாதுகாப்பதை போன்று, பற்களையும் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், வாய் துர்நாற்றம், பற்களில் கூச்சம், ஈறுகளில் வீக்கம், பற்களில் இருந்து ரத்தம் கசிவு போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இருப்பினும், சில இயற்கை பொருட்களின் உதவியுடன் அனைத்து பல் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

தற்போது ஈறுகளின் இரத்தக்கசிவு அல்லது புண் பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று, உடலில் வைட்டமின் c  போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் பெரும்பாலும் ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். இதனால் பற்கள் தொடர்பான பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. அதனால் தான் ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக மாற்ற சில இயற்கை வழிகள்இருக்கிறது.

உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் : 

பற்கள் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உப்பு பயன்படுகிறது. பல நிபுணர்கள் பற்களில் உள்ள கிருமிகளை அகற்ற உப்பு நீரில் வாய் கொப்பளிக்க பரிந்துரைக்கின்றனர். அதே நேரத்தில், ஈறுகளின் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறவும் உப்பு நீர் மிகவும் உதவியாக இருக்கும்.

கடுகு எண்ணெயை பற்களில் தடவவும் : 

கடுகு எண்ணெய் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்யலாம். இதன் பயன்பாடு ஈறுகளின் வீக்கத்தை நீக்குவது மட்டுமல்லாமல், பற்கள் வலுவாக இருக்கும்.

கற்றாழை பயன்படுத்தவும் : 

கற்றாழையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே கற்றாழை ஜெல்லை ஈறுகளில் தடவினால், பற்கள் மற்றும் வாய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

யூகலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தவும் : 

யூகலிப்டஸ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு கிருமிநாசினி கூறுகள் ஏராளமாக காணப்படுகின்றன. ஈறு செல்களை உருவாக்குவதன் மூலம் ஈறுகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு தினமும் ஒருமுறை யூகலிப்டஸ் எண்ணெயை பற்களில் தடவலாம். இது ஈறுகளின் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும்.

மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும் : 

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள் ஏராளமாக உள்ளன. வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களை வலுப்படுத்த இது வேலை செய்கிறது. மறுபுறம், கடுகு எண்ணெயில் மஞ்சள் மற்றும் உப்பு கலந்து ஈறுகளில் தடவினால் வீக்கம் குறையும்.

பற்களின் ஈறுகளில் இரத்தக் கசிவு பிரச்சனை இருந்தால், பால், கிராம்பு, பச்சை காய்கறிகள் போன்றவை உணவாக உட்கொள்ளலாம். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!