இந்த தீபாவளிக்கு நீங்கள் வாங்கும் பட்டுப்புடவை உண்மையானதா?அல்லது போலியா? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பட்டுப்புடவையை விரும்பாத பெண்கள் யாருமில்லை. திருமணம் சடங்கு திருவிழா போன்ற நாட்களில் பட்டு சேலையை பெண்கள் விரும்பி கட்டுவார்கள். அதுமட்டுமன்றி, பண்டிகை நாட்களிலும் பெரும்பாலானோர் பட்டு சேலை வாங்குவார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு நீங்களும் பட்டுப்புடவை தான் வாங்கப் போகிறீர்கள் என்றால், ஏற்கனவே நீங்கள் பட்டுப் புடவையின் நிறம், ஜரிகை போன்றவற்றை குறித்து மனதில் வைத்திருப்பீர்கள்.
மேலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவை தான் இருக்கும். ஆனால் அதன் விலையானது கடைக்குக் கடை வேறுபடுவதால், அவற்றின் தரம் குறித்து எப்போதும் நமக்குள் ஏராளமான சந்தேகம் மற்றும் குழப்பம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்தவகையில் இத்தொகுப்பில் நாம் பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் வாங்கும் பட்டு புடவை நல்லதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்..
எடை: பொதுவாகவே, ஒரிஜினல் பட்டு புடவை அதிக கனமாக இருக்காது. ஏனெனில் அது பெரும்பாலும் பட்டு பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் அது இலகுவாக இருக்கும். ஆனால் போலி புடவைகளில் கலப்பு பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவை கனமாக இருக்கும்.
நூல்: உண்மையான பட்டுப்புடவையில் நூல் மிகவும் நேர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் போலி பட்டு புடவையில் மலிவான மற்றும் தரமற்ற நூல்கள் பயன்படுத்தப்படும். உண்மையான பட்டு புடவை நூல்கள் வலிமையானவை மற்றும் எளிதில் உடைக்க முடியாது. எனவே நூல்களின் தரம் மற்றும் ஆயுள் ஆகியவற்றை சரிபார்க்கவும். உண்மையான பட்டு புடவையை அடையாளம் காண இது ஒரு சிறந்த வழியாகும்.
இதையும் படிங்க: வீட்டிலேயே பட்டுப்புடவை இப்படி துவைங்க.. சாயம் போகாது; இனி டிரை கிளீன் வேண்டாம்..!!
பளபளப்பு: பட்டுபோல ஜொலிக்கிறது என்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா! ஆனால், இந்த பளபளப்பானது எல்லாம் நல்ல பட்டுப் புடவையில் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, வெறும் பளபளப்பை மட்டும் நம்பி புடவையை தேர்ந்தெடுக்காதீர்கள்.
இதையும் படிங்க: ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கவேண்டிய 5 புடவைகள்..! முழு விபரம் இதோ..!!
மலிவான விலை: பொதுவாகவே பல கடைகளில் மலிவான விலைக்கு பட்டு சேலைகள் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பட்டுப் புடவை நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட்ட செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் நிறைய டிசைன் உள்ள புடவையை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் அதனை நீங்கள் வாங்கும் முன் அவற்றின் தரம் பற்றி சந்தேகப்படுவது தவறில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
டிசைன்: சில இடங்களில் டிசைன் வைத்து பட்டு புடவைக்கு பெயர் வைத்து விற்பனை செய்வார்கள் ஆனால் என்னதான் பெயர் வைத்தாலும் பட்டு நூலின் தரம் ஒன்றுதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் பெயரை வைத்து பட்டின் தரத்தை ஒருபோதும் முடிவு செய்யாதீர்கள். பட்டில் மொத்தம் நான்கு வகைகள்தான் உள்ளது.
பட்டுப் புடவையின் அளவு: நீங்கள் பட்டுப் புடவை வாங்கும் முன் அவற்றின் அளவை சோதித்துப் பார்த்து வாங்குவது நல்லது. பொதுவாகவே பட்டுப்புடவை 6.20 மீட்டர் இருக்கும். எப்படியெனில், புடவையின் நீளம் சராசரியாக ஐந்தரை மீட்டர், ஜாக்கெட்டு 70 சென்டிமீட்டர் இருக்கும். அதுமட்டுமின்றி, அகலம் 47 - 50 இன்ச் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
ஒரிஜினல் பட்டு: துணியின் ஒரு சிறிய துண்டு எடுத்து லைட்டர் அல்லது தீப்பெட்டியை பயன்படுத்தி எரியுங்கள். உண்மையான பாட்டு எரியும்போது முடி போன்ற வாசனை அதிலிருந்து வரும் மற்றும் சுடர் சிறியதாக இருக்கும். மற்றும் விரைவாக அணைந்து விடும். சாம்பல் கருப்பு நிறத்தில் இருக்கும்.