ஒரு பக்கம் கொரோனா! இன்னொரு பக்கம் கோடை வெயில் !சமாளிப்பது எப்படி?

By ezhil mozhiFirst Published Apr 3, 2020, 8:00 PM IST
Highlights

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஏசி அறையில் வசிப்பவர்கள் ஏராளம். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இயற்கையான காற்று தான் எப்போதும்... அதே போன்று ஏசி பயன்படுத்தினாலும் அதில் இருந்து வரக்கூடிய காற்று மூலமாக தான் மிக எளிதாக கிருமிகள் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. 

ஒரு பக்கம் கொரோனா! இன்னொரு பக்கம் கோடை வெயில் !சமாளிப்பது எப்படி?

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு பக்கம் கொரோனா பயத்தால் வீட்டிற்குள் இருப்பதும்.. இன்னொரு பக்கம் கோடை வெயிலின் காரணமாக வெயிலின் தாக்கம் வீட்டிற்குள்ளேயே உணர முடிவதாக அமைந்துள்ளது.

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஏசி அறையில் வசிப்பவர்கள் ஏராளம். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு இயற்கையான காற்று தான் எப்போதும்... அதே போன்று ஏசி பயன்படுத்தினாலும் அதில் இருந்து வரக்கூடிய காற்று மூலமாக தான் மிக எளிதாக கிருமிகள் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. 

இயற்கையான காற்றில் இருந்தாலும்.. கோடை வெப்பம் காரணமாக வியர்வை வராமல் இருக்காது. இது போன்ற சமயத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், லேசான காட்டன் ஆடைகளை உடுத்தலாம். அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.

முடிந்தால் காலை மாலை என இரு வேளையும் குளிப்பது நல்லது. உடல் சூட்டிற்கு வழிவகுக்கும் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு,கருவாடு உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. வெளியில் செல்லும் போது கூட தன்னுடன் எப்போதும் ஒரு வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு குடை வைத்துக் கொள்வது சிறந்தது.

உடன் போகும் வழியில் உள்ள பழச்சாறு மற்றும் இளநீர் நுங்கு தர்பூசணி தயிர் மோர் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது சிறந்தது. வீட்டில் உள்ளவர்களும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள, குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பது உடலுக்கு நல்லது. 
 
click me!