விருப்பம் இருந்தால் மக்களுக்காக 1000 ரூபாயை விட்டுக்கொடுக்கலாமே..! - தமிழக அரசு!

By ezhil mozhiFirst Published Apr 3, 2020, 4:49 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

விருப்பம் இருந்தால் மக்களுக்காக 1000 ரூபாயை விட்டுக்கொடுக்கலாமே..! - தமிழக அரசு!

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மற்றும் விலையில்லா உணவு பொருட்களை அவரவர் விருப்பத்தின் பேரில் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மாத சம்பளம் பெறுபவர்கள் விட தினந்தோறும் சம்பளம் பெறுபவர்கள் பெரும் பாதிப்பு அடைந்து உள்ளனர். இந்த ஒரு நிலையில் அரசு மிகப் பெரும் முயற்சி எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் தொகையும், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்க முன் வந்துள்ளது 

எனவே கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்படும் ரூ.1,000 மற்றும் விலையில்லா உணவு பொருட்களை விருப்பத்தின் பேரில் விட்டுக்கொடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 

நேற்று முதல் வினியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விருப்பத்தின் அடிப்படையில் நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா உணவு பொருட்களை விட்டுக்கொடுப்பவர்கள்  tnpds.gov.in என்ற இணையதளத்திலும், tnpds செயலியிலும் சென்று உதவித்தொகை மட்டும் என்றால் ரூ.1,000 அல்லது விலையில்லா பொருட்கள் மட்டும் அல்லது இரண்டையும் விட்டுக்கொடுக்கும் தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம். 

இவ்வருவிட்டுக்கொடுக்கும் பொருட்கள் தமிழக அரசு ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

click me!