Love break up: காதல் பிரேக்கப்பா...? முரட்டு சிங்கிளா.! மகிழ்ச்சியாக கடந்து செல்ல ஈஸியான 8 வழிமுறைகள்...!

காதல் பிரேக்கப் ஆனால், காதலர் தின நாளில் சந்தோஷமாக கடந்து செய்வதற்கான ஈஸியான 8 வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு பிரேக்கப் ஆனால், அல்லது சிங்கிளாக இருப்பவர் என்றால், காதலர் தின வாரம் மற்றும் நாளில் சந்தோஷமாக இருப்பதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

பிப்ரவரி 14 இன்று  உலகம் முழுவதும் பல அதிர்ஷ்டசாலிகள் துணையோடு இணைந்து கொண்டாடி மகிழ்வர். ஒரு சிலர் காதலர் தினத்தில் பிரேக்கப் ஆனா என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருப்பார். மேலும், பலரோ தனிமையில் ‘சிங்கிள்ஸ்’ எனும் பெயர் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பர். சிங்கிளாய் இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்.  சிங்கிளாய் இருப்பவர்கள் மற்றும் பிரேக்கப் ஆனவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், காதலர் தினத்தை நீங்கள் தனியே கூட கொண்டாடலாம்.

Latest Videos

உங்களை நீங்கள் நேசியுங்கள்:

இன்றைய ''பிஸியான'' வாழ்கை முறையில் நம்மை நாமே நேசிக்க, பாராட்டி கொள்ள மறந்து விடுகிறோம். எனவே இந்த காதலர் தினத்தில் நீங்கள் சிங்கிளாக இருந்தாலும் சரி, பிரேக்கப் ஆனவராக இருப்பவராக இருந்தாலும் சரி காதலர் தினத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க மகிழ்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபடுங்கள்.

காதலர் தினத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க சிறந்த வழிமுறைகள்:

டிவி பார்க்கலாம்: 

பல்வேறு OTT-க்களில் புதிய திரைப்படங்கள் கிடைப்பதால் வீட்டிலிருந்த படியே உங்களுக்கு விருப்பமான திரைப்படத்தை தேர்வு செய்து குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்.

சாப்பிட்டு மகிழலாம்: 

உங்களுக்கு பிடித்த சாப்பாடு அல்லது சிற்றுண்டியை சாப்பிட்டு  மகிழலாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு பிடித்த ரெஸ்டாரன்ட்டில் நீங்கள் விரும்பும் உணவுகள் பலவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழலாம்.

புத்தகம் படிக்கலாம்: 

நீங்கள் ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர் என்றால் வாசிக்கும் பழக்கத்தை சில வருடங்களாக மறந்துவிட்டீர்கள் என்றால் அந்த பழக்கத்தை மீண்டும் காதலர் தினத்தில் இருந்து தொடங்குவது உங்களுக்கு வித்தியாசமான நாளாக அமையும். ஏனென்றால், புத்தக வாசிப்பு நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் உடையது. புத்தகங்களை வாசிப்பது அது மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான செயல்களில் ஒன்றாகும்.

மதிய தூக்கம்: 

நீங்கள் மதிய நேரத்தில் தூங்கி நீண்ட நாட்கள் ஆகிறது என்றால், காதலர் தினத்தன்று மதியம் நன்றாக சாப்பிட்டுவிட்டு  2 மணி நேரம் நன்றாக தூங்கி எழுங்கள். இது உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உங்களை நிம்மதியாக உணர வைக்கும்.

ஸ்பா செல்லலாம்: 

நல்ல மசாஜ் அமைதியாக மற்றும் நிம்மதியாக உணர வைக்கும். ஸ்பா மசாஜ் உடனடியாக உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை தளர்த்த அனுமதிக்கிறது.

உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்:

உங்கள் உடற்பயிற்சி, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. இவை உங்களுக்கு ஓய்வெடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் காலை பொழுதை புத்துணர்வுடன் தொடங்க உதவும்.வயதான காலத்தில் மட்டும்மல்ல எப்பொழுதுமே உடல் நன்றாக இருக்கவும், இயங்கவும், உடற்பயிற்சி, சைக்கிள், பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்ச்சியை நமது உடல் வாகு மற்றும் வயதுக்கு ஏற்றவாரு செய்வதற்கு காதலர் தினத்தில் முயற்சி செய்யுங்கள். 

எனவே, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும்.

click me!