அதிக வியர்வை நாற்றமா.? கவலை வேண்டாம்.. இதை உடனே பண்ணுங்க போதும்..!

By ezhil mozhiFirst Published Jul 4, 2019, 7:43 PM IST
Highlights

அதிகப்படியான வியர்வை நாற்றம் நம்மை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.இதனால் அவர்கள் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடலாம்.
 

அதிகப்படியான வியர்வை நாற்றம் நம்மை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.இதனால் அவர்கள் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடலாம்.

அதாவது நம் தோலின் அடிப்புறத்தில் இருக்கக்கூடிய சுரப்பிகளில் இருந்து வெளிவரும் இந்த வியர்வை மேற்புற தோலில் இருக்கக்கூடிய ஒரு சில நுண்கிருமிகள் உடன் கலந்து வெளியேறுகிறது. அவ்வாறு கலக்கும்போதுதான் வியர்வை நாற்றம் அதிகரிக்கின்றது. இதைத்தான் நாம் வியர்வைநாற்றம் என்கிறோம். 

இதைவிட நாம் மற்றொன்றை யோசித்தோம் என்றால் ஒரு விஷயம் நமக்கு நன்றாகவே புலப்படும். சாதாரண நேரத்தில் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வைக்கும் அதிகமான வேலை மற்றும் புழுக்கம் காரணமாக வெளியேறும் வியர்வைக்கு ஒரு விதமான வித்தியாசத்தை காண முடியும்.

மேலும், நல்ல நறுமணமிக்க சோப்புகளை பயன்படுத்தும் போது சிறிது நேரம் வரைக்கும் வியர்வை நாற்றம் இல்லாமல் ஒரு விதமான நறுமணம் வீசும். ஆனால் நேரம் செல்ல செல்ல நம் உடலில் மேற்புற தோலில் தங்கியிருக்கக் கூடிய ஒரு சில கிருமிகள், பாக்டீரியாக்களுடன் கலந்து உடலில் இருந்து வெளியேறும் வியர்வை துர்நாற்றத்தை அதிகரிக்க செய்யும்.

மேலும் இவ்வாறு வெளியேறும் வியர்வை வெறும் கைகளால் துடைப்பது தவறு. இது போன்ற சமயத்தில் பருத்தித்துணியால் ஆன துணிகொண்டு, துடைத்தால் மிகவும் நல்லது. ஏனென்றால் இவ்வாறு துடைக்கும்போது துர்நாற்றம் சற்று குறையும். அவ்வாறு இல்லாமல் வெறும் கைகளால் வியர்வையை துடைக்கும் போது, அது மேலும் இது போன்ற சின்ன சின்ன டெக்னிக் செய்தாலே போதும். துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். 

click me!