அத்தி வரதர் அருள் பார்வை உச்சம் பெரும் நாள் இதுதான்..! தரிசனத்திற்கு தயாராகுங்கள்..!

By ezhil mozhiFirst Published Jul 4, 2019, 4:32 PM IST
Highlights

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதர் வைபவம் மிக சிறப்பாக காஞ்சிபுரத்தில் நடத்தைப்பெற்று வருகிறது. 48 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் வரதரை இரு விதமாக  தரிசிக்க முடியும். 

அத்தி வரதர் அருள் பார்வை உச்சம் பெரும் நாள் இதுதான்..! தரிசனத்திற்கு தயாராகுங்கள்..! 

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி வரதர் வைபவம் மிக சிறப்பாக காஞ்சிபுரத்தில் நடத்தைப்பெற்று வருகிறது. 48 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் வரதரை இரு விதமாக  தரிசிக்க முடியும். அதன் பிடி, முதல்  24 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் வரதரை தரிசனம் செய்ய முடியும். 

மிக முக்கிய நட்சத்திர நாட்கள்: 

அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் வரும் நாளாக பார்த்து பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது

அஸ்தம் நட்சத்திரம்  - ஜூலை 9 ஆம் தேதி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி,

திருவோணம் நட்சத்திரம் - 18 ஆம் தேதி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி 

ரோகிணி நட்சத்திரம் - 28 ஆம் தேதி. இந்த நாட்களில் வழிபடுவது  மிக சிறப்பு நன்மைகளை தரும். மேலும் சுப முகூர்த்த தினங்களில் வழிபடலாம்.

ஜூலை மாதம்  4, 8, 15 ஆம் தேதி முகூர்த்த தினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆம் தேதி பவுர்ணமி தினம் என்பதால் மிகவும் நல்ல நாள். கடவுளை இந்த நாட்களில் வழிபடுவது நல்லது. 

அத்தி வரதரின் அருள் பார்வை உச்சம் பெரும் நாள்..! 

ரோகிணி நட்சத்திரம் நாளான ஜூலை 28 ஆம் தேதி ஏகாதசியும் சேர்ந்து வருவதால் வரதரின் அருள் பார்வை உச்சமாக இருக்கும். இந்த நாளில் அத்தி வரதரை தரிசித்தால் கோடி நன்மைகள் கிடைக்கும். அத்தி வரதர் தரிசனத்திற்காக காத்திருப்பவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் சென்று வழிபடுவது நல்லது.

click me!