பக்தர்களே.. காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன நேரம் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க..!

By ezhil mozhiFirst Published Jul 4, 2019, 1:45 PM IST
Highlights

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  ஒவ்வொரு  நாளும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிர்க்கரித்த வண்ணம் உள்ளனர். 

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை தரிசனம் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

அதாவது ஜோலை 4 ஆம் தேதியான இன்று முதல் 10 ஆம் தேதி வரை வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நடைபெற உள்ளதால் அத்தி வரதர் தரிசன நேரத்தை மாற்றி அமைத்து உள்ளனர். அதே போன்று ஜூலை 11 ஆம் தேதியும், ஆனி கருடசேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே இந்த 8 நாட்களில், மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதால், இந்த குறிப்பிட்ட 8 நாட்களுக்கு மட்டும் மாலை 5 மணியுடன் தரிசன நேரம் நிறுத்தப்படுகிறது. இதற்கு மாறாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, காலை 5 மணிக்கே தரிசன நேரம் தொடங்கி விடும் என்பது கூடுதல் தகவல் 

click me!