Remove Mud Stains Clothes : மழைக்காலத்தில் துணியில் படிந்த சேற்றுக்கறையை சுலபமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றால் சாலை முழுவதும் சேரும், சகதியுமாக இருப்பதை நம்மால் காண முடியும். இதனால் வெளியில் செல்லும்போது அணிந்திருக்கும் ஆடையில் சேற்றுக்கறைகள் படிந்து விடும். அப்படி படிந்தால் அதை போக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் குறிப்பாக வெள்ளை நிற ஆடையில் படிந்த கரையை நீக்குவது ரொம்பவே கஷ்டம். எவ்வளவு துவைத்தாலும் சேற்றின் கறை திட்டு திட்டாக தெரியும். இதனால் தான் பெரும்பாலானோர் மழைக்காலத்தில் வெள்ளை நிறத்தில் ஆடையை அணிய விரும்ப மாட்டார்கள்.
இருந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் வெள்ளை நிற ஆடை அணிந்து செல்லும் சூழல் ஏற்படும். சும்மாவே குழந்தைகளின் துணியை துவைப்பதற்கு கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வெள்ள நிற உடை என்றால் சொல்லவா வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் குழந்தையின் வெள்ளை நிற ஆடை மற்றும் உங்களது ஆடையில் படிந்திருக்கும் சேற்றுக் கறையை சிரமமில்லாமல், மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உடனே சுத்தம் செய்யும்:
மழைக்காலத்தில் சேற்றால் அடைகளில் கறை படிந்தால் அதை உடனடியாக சுத்தம் செய்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று நீங்கள் அப்படியே வைத்துவிட்டால் அதை சுத்தம் செய்வது சற்று சிரமமாக இருக்கும். எனவே சேற்றுப்படிந்த ஆடையை உடனே சுத்தம் செய்ய முயற்சி செய்யுங்கள். இதற்கு முதலில் தண்ணீர் பயன்படுத்தாமல் ஒரு பிரஷ் கொண்டு சேட்டை நன்றாக சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். இதனுடன் சோப்பு பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: மிதியடியை துவைப்பது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ்!!
பேக்கிங் சோடா கறையை போக்கும்!
ஆடையில் படிந்திருக்கும் சேற்றுக்கறை கொஞ்சம் பிடிவாதமாக இருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதைப் போக்க நீங்கள் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். ஏனெனில் பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே கறையை போக்கும் பண்பு உள்ளது. எனவே இது ஆடையில் படிந்திருக்கும் சேற்றுக் கறையை சுலபமாக அகற்றி விடும். இதற்கு பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு பேஸ்ட் போல ஆக்கி அதை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு சோப்பு பயன்படுத்தி எப்போதும் போல துணியை துவைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆடையில் படிந்திருக்கும் சேற்றுக் கறை எளிதில் நீங்கிவிடும்.
இதையும் படிங்க: போர்வையில் வீசும் கெட்ட வாசனை.. 'இப்படி' ஈஸியா சுத்தம் செய்ங்க!!
வினிகரும் உதவும்:
ஆடையில் படிந்த பிடிவாதமான சேற்றுக் கறையை அகற்ற வினிகர் உங்களுக்கு உதவும். இதற்கு வினிகருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிறகு அந்த தண்ணீரில் கறை படிந்த ஆடையை சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு எப்போதும் போல துணியை துவைக்க வேண்டும்.
எலுமிச்சை சாறு:
பேக்கிங் சோடா மற்றும் வினிகரை தவிர எலுமிச்சை பிடிவாதமான கறையை அகற்றும். இதற்கு எலுமிச்சை சாற்றை ஆடையில் படிந்து இருக்கும் சேற்றுக் கறையின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு எப்போதும் போல துணியை சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.
டிடர்ஜெண்ட் பயன்படுத்தலாம்:
வெள்ளை மற்றும் சாதாரண ஆடையில் படிந்திருந்த விடாப்படியான கரையை சுத்தம் செய்வதற்கு டிடர்ஜெண்ட் பவுடர் பயன்படுத்தலாம். இதற்கு சூடான நீரில் சிறிதளவு டிடர்ஜெண்ட் பவுடரை சேர்த்து பிறகு அதை சேர்த்து கறை படிந்த இடத்தில் ஊற்றி, சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு தேய்த்து அலசினால் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.