Sexual health: தினமும் உடற்பயிற்சி அவசியம்...பாலியல் உறவுக்கு பெஸ்ட்...! யார் சொல்றாங்க தெரியுமா..?

Anija Kannan   | Asianet News
Published : Mar 24, 2022, 07:27 AM IST
Sexual health: தினமும் உடற்பயிற்சி அவசியம்...பாலியல் உறவுக்கு பெஸ்ட்...! யார் சொல்றாங்க தெரியுமா..?

சுருக்கம்

Sexual health: உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகப்படியான உடல் எடை காரணமாக, பாலியல் வாழ்கை பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பில்லாமை, மன அழுத்தம், போன்ற காரணங்களால் பல்வேறு உடல் உபாதைகளை எதிர் கொண்டு வருகிறோம். இதனால், ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு உங்களது பாலியல் வாழ்கை  பாதிக்கும் என்பது சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. 

 உடற்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளில் நினைவாற்றல் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, மன அழுத்த குறைவு உள்ளிட்டவை முக்கியமான ஒன்றாகும். இந்த பழக்கம் பாலியல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்பது பலருக்கு தெரியவில்லை. ஆம், நல்ல பாலியல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்திய தேசிய சுகாதார ஆய்வின் முடிவில், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக 40% பெண்களும் 31% ஆண்களும் பாலியல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.ஆகவே, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது எவ்வளவு நன்மை தரும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

பாலியல் செயலிழப்பு குறையும் : 

உடற்பயிற்சி அன்றாடம் மேற்கொள்வதன் மூலம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ரீதியான சிக்கல்கள் குறைகிறது. மேலும், இதய ஆரோக்கியம், ஸ்டாமினா ஆகியவை உங்களுக்கு வழங்குவதால், உங்கள்  துணையை திருப்தி படுத்த உதவுகிறது.

மன அழுத்தம் குறையும் : 

உடல் செயல்பாடு 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்' எனப்படும் எண்டோர்பின்களை தூண்டுகிறது. இவை,  உங்கள் செக்ஸ் வாழ்விலும் எதிரொலிக்கும். அதாவது, மன அழுத்தத்தைக் கையாளும் போது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வைத்து கொள்வது உங்கள் பாலியல் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.

செக்ஸியான உடல் அமைப்பை பெறலாம்:

 செக்ஸியாக மற்றும் கட்டுடல் மேனியாக இருப்பது பெரும்பாலும், பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கு பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் விரும்பிய உடல் வடிவம் பெற முடியும். இதன் விளைவாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் வலுவான செக்ஸ் உந்துதல் ஏற்படும்.

ரத்த ஓட்டதை அதிகரிக்க செய்கிறது: 

உடற்பயிற்சியின் போது உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். இதன் காரணமாக ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகிறது. இதன் பயனாக பாலின உறுப்புகளுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. இது, ஒரு நபரின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உச்சக்கட்ட பாலியல் அனுபவத்தை பெறவும் உதவுகிறது.

மேலும் படிக்க...Hair problem: வெயில் காலத்தில் முடிக்கு ஏற்படும் அரிப்பு, பொடுகு, வறட்சி... தீர்க்கும் ஈஸியான 5 வழிமுறைகள்..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்