Today astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்குள் நுழையும் ராகு...யாருக்கு ஆபத்து? யாருக்கு அதிர்ஷ்டம்.!

By Anu Kan  |  First Published Mar 24, 2022, 5:54 AM IST

Today astrology: ராகு 18 ஆண்டுகளுக்கு பிறகு, மேஷ ராசியில் நுழைகிறார். ராகுவின் இந்த ராசி மாற்றம் சிலரது வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவை, எந்ததெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.


ராகு 18 ஆண்டுகளுக்கு பிறகு, மேஷ ராசியில் நுழைகிறார். ராகுவின் இந்த ராசி மாற்றம் சிலரது வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவை, எந்ததெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ராகு கிரகம்:

Tap to resize

Latest Videos

undefined

நிழல் கிரங்களான ராகு மற்றும் கேதுவிற்கு உருவம் கிடையாது. வலமிருந்து இடமாக சுற்றக்கூடிய ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு  ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். 

ஜோதிட சாஸ்திரப்படி, ராகு கிரகம் ஏப்ரல் 12ம் தேதி  தனது ராசியை மாற்றுகிறது. இதனால், ராகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இந்த ராசி மாற்றம் சிலருக்கு நன்மையை உண்டு பண்ணும். சிலருக்கு ஆபத்தை கொடுக்கும்,  ராகுவின் இந்த சஞ்சாரம் எந்தெந்த ராசிகளை பாதிக்கும், எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

மேஷம்:

ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகத்தின் தளபதி என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய், மேஷம் ராசியில் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே, மேஷத்தில் ராகு நுழைவது சில சமயங்களில் எதிர்மறையான பலன்களைத் தரும். ராகு சஞ்சார காலத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், குடும்பத்தில் குழப்பும், நிதி இழப்பு ஏற்படலாம். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் ராகுவின் ராசி மாற்றத்தால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி இந்த நேரத்தில் கேது இந்த ராசியில் இருக்கிறார். உங்களின், வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம். இலக்கை அடைவதில் சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்:

மகர ராசியினருக்கு, ராகு வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கலாம். பெயர்ச்சி காலத்தின் போது கோபத்தை தவிர்க்க வேண்டும். பதவி உயர்வு, தொழில் சம்பந்தமான காரியங்களில் தடைகள் ஏற்படலாம். உறவுகள் சிதைந்து போகலாம். மேலும், பேச்சில் கவனம் தேவை. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படலாம். பணத்தை சேமிப்பது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு எப்படி வேலை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வேலையில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் உழைப்புக்கு மதிப்பு மரியாதை கூடும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். தொழிலில் குறிப்பாக, கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குவது நன்மை பயக்கும்.

கும்பம்:

கும்பம், ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் யோகம் உருவாகும். இந்த யோக காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். இந்த காலத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் பணம் வரலாம். சிக்கிய பணம் எங்கிருந்தோ பெறலாம். வெளிநாட்டு பயணமும் கை கூடும். 

மேலும் படிக்க....Today astrology: கும்ப ராசியில் சுக்கிரன்...இந்த 5 ராசிகளுக்கு தொழில்,வாழ்கையில் மகிழ்ச்சி! இன்றைய ராசி பலன்!


 

click me!