கட்டிப்புடி வைத்தியம் உண்மையிலே ஒர்க் அவுட் ஆகுமா? Hugs தரும் நன்மைகள் என்ன? ஒரு பார்வை!

By Ansgar R  |  First Published Jul 21, 2023, 4:51 PM IST

உண்மையில் ஒரு மனிதரை கட்டிப்பிடிக்கும் பொழுது அதனால் நமக்கு ஏதும் நன்மைகள் ஏற்படுமா?


வசூல்ராஜா MBBS என்ற திரைப்படத்தில் உலகநாயகன் கமல், தனது தாய் தனக்கு செய்யும் கட்டிப்பிடி வைத்தியத்தை பலருக்கும் செய்து குணப்படுத்துவதை நாம் கண்டு ரசித்து இருப்போம். உண்மையில் ஒரு மனிதரை கட்டிப்பிடிக்கும் பொழுது அதனால் நமக்கு ஏதும் நன்மைகள் ஏற்படுமா?. நிச்சயம் ஏற்படும், ஏன் அது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், உங்களுடைய உடல் நலனை பேணி பாதுகாக்கவும், சில சமயங்களில் உங்கள் உடல் எடையை குறைக்கவும் அது பயன்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

நம் உடம்பில் சுரக்கக்கூடிய ஆக்ஸிடோஸின் என்ற ஒருவகை ஹார்மோன் நீங்கள் உடல் ரீதியாக சிலருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது அதிக அளவில் சுரப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த ஆக்ஸிடோஸின் அளவு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது என்றம் ஆய்வு கூறுகிறது. 

Tap to resize

Latest Videos

மழைக்கால நோய்களை தடுக்க 5 பயனுள்ள வீட்டு வைத்தியம் இதோ..

குறிப்பாக ஒருவரை ஒருவர் கட்டிபிடித்துக்கொள்வது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிய அளவில் உதவி செய்யும். இருதய நோய்களைப் பொறுத்தவரை உயர் ரத்த அழுத்தமே முதன்மையான காரணிகளாக இருக்கும் சமயத்தில், அந்த ரத்த அழுத்தத்தை குறைக்க வல்லது இந்த Hug என்பதால் அது ஒரு அருமருந்து.

முன்பே கூறியது போல கட்டிப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிடோஸின் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதன் காரணமாக மனம் அமைதியாகி உங்களுக்கு தூக்கமும் விரைவில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒரு நல்ல தூக்கம் மனிதர்களுக்கு பல நன்மைகளை தருகின்றது. கணவன் மற்றும் மனைவிக்கு நடுவில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படும் பெரிய சண்டைகளை தடுக்கக்கூட ஒரு இதமான Hug சிறந்த வழி.

உனக்கு நான் இருக்கிறேன் என்று ஒருவர் உங்கள் கைபிடித்து சொல்லும் தைரியம், நம்மை பல தடைகளை தாண்ட வைக்கின்றது. இதை நிச்சயம் நாம் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம்.  

வழக்கமான உடலுறவால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமாம்.. என்னென்ன தெரியுமா?

click me!