என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த டீயை தினமும் குடித்தால் போதும்.. மேலும் பல நன்மைகள்..

By Ramya sFirst Published Jul 21, 2023, 10:32 AM IST
Highlights

இதில் உள்ள மூலக்கூறுகள் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமானால், சாமந்தி பூ டீ-ஐ அருந்தலாம். 

சில பொருட்களில் இயற்கையாகவே பல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் சீமை சாமந்தி பூக்கள். இந்த பூக்களில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. இது பல வகையான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாகும்.

நீரிழிவு, மாதவிடாய் வலி மற்றும் தூக்க பிரச்சனைகளை சமாளிக்கவும் இந்த சீமை சாமந்தி பூக்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகிறது. சீமை சாமந்திப்பூவின் அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் பதட்ட எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் முன் நோய்க்குறியின் (PMS) அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் கவலை மற்றும் அசௌகரியத்தை போக்க இது உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள் சீமை சாமந்தி டீ குடிப்பதால் அவர்களின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும், இவை மருந்துகளுக்கு மாற்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆஸ்டியோபோரோசிஸ்

சீமை சாமந்தி தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகளின் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகின்றன. இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

புற்றுநோய்

சீமை சாமந்தி தேநீர் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பது சில ஆய்வுமுடிவுகளில் இருந்து தெஇயவந்துள்ளது இதில் உள்ள சேர்மங்கள் கல்லீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் ரத்த புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இருப்பினும், இதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்ல தூக்கம்

உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், நல்ல தூக்கத்தை பெறவும் சீமை சாமந்தி டீ சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும். ஆரோக்கிய நன்மைகளுடன், சாமந்தி டீ பல அழகு சார்ந்த நன்மைகளையும் வழங்குகிறது.

என்றென்றும் இளமை 

இந்த சீமை சாமந்திப் பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்கள் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, கெட்டியான தசைகளை உருவாக்குகிறது. இது வயதாகும் தோற்றத்தை குறைத்து, என்றென்றும் இளமையாக இருக்க உதவுகிறது.

Food and Health: இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க! உடலுக்கு ஆபத்து..!!

click me!