திக் திக் தகவல்..! காலை 9 மணி முதல் 3 வரை... கண்ணில் படும் கானல் நீர்..! தாங்க முடியாத வெப்பம்..! உஷார் மக்களே

By ezhil mozhiFirst Published Apr 22, 2020, 2:42 PM IST
Highlights

கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நிலவி வந்தது. மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
 

திக் திக் தகவல்..! காலை 9 மணி முதல் 3 வரை... கண்ணில் படும் கானல் நீர்..! தாங்க முடியாத வெப்பம்..! உஷார் மக்களே!

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 102 டிகிரி பாரான்ஹூட் வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவில் மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் அனல் காற்று மற்றும் வெப்பத்தின் தாக்கம் உணரும் வகையில் இருக்கின்றது.

கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நிலவி வந்தது. மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த ஒரு நிலையில் அடுத்து வரும் சில நாட்களுக்கு 104 டிகிரி பாரன்ஹூட் வரை வெப்பநிலை நிலவும் என்பதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவில் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர்.

இந்த நிலையில் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் காலை 9 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, நெல்லை, சேலம், வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என்றும் சாலைகளில் கானல் நீர் அதிகளவில் தென்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குமரி,தேனீ,கோவை,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

click me!