தமிழக மக்களுக்கு சந்தோஷமான செய்தி..! சரியாக 24 மணி நேரத்தில் நடந்த அற்புதம்..! கவனத்தை ஈர்த்த 27 மாவட்டங்கள் !

By ezhil mozhiFirst Published Apr 22, 2020, 1:40 PM IST
Highlights

மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்டு உள்ளது அரசு. அதில் சென்னை, தென்காசி, விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நாமக்கல் திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக மக்களுக்கு சந்தோஷமான செய்தி..! சரியாக 24 மணி நேரத்தில் நடந்த அற்புதம்..! கவனத்தை ஈர்த்த 27 மாவட்டங்கள் ! 

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இருந்தபோதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி 358 பேர் வரை உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ஒரே நாளில் ஆயிரத்து 60 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், மாநிலம் முழுவதும் 76 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் 27 மாவட்டங்களில் எந்தவொரு நோய்த்தொற்றும் உறுதிசெய்யப்படவில்லை என்ற நல்ல தகவலும் கிடைத்துள்ளது.

அதன்படி மாவட்டம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலை வெளியிட்டு உள்ளது அரசு. அதில் சென்னை, தென்காசி, விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நாமக்கல் திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்த பத்து மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் எந்த ஒரு நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சற்று ஆறுதல் தரும் விஷயமாகவும் அமைந்துள்ளது.

click me!