Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் செல்வத்தையும், வியாழன் கிரகம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமாகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் செல்வத்தையும், வியாழன் கிரகம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமாகும்.
இவை இரண்டின் அருட்பார்வை ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம். இப்போது இந்த இரண்டு சுப கிரகங்களும் இணையப் போகின்றன. இந்த கிரகங்களின் இணைப்பின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று சிறப்பான பலன்களை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அவசியம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். திருமண யோகம் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இன்று நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் பிறக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை. எந்த விஷயங்களிலும் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் பொறுமையாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளை பற்றிய சிந்திக்காமல் இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நீண்ட நாள் இருந்து வந்த கடன் தொல்லை நீங்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் இந்த நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் லாபம் காண்பீர்கள். தாய் வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்வீர்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தித்து செயல்படும் நேரம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவனம் அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களின் தன்னம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும். எதிர் வரும் பிரச்சனைகளை எளிதாக சமாளித்து முன்னேறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் தொல்லைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பொறுமை அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கூட்டு தொழில் புரியும் வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் -மனைவி உறவு வலுப்பெறும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்உங்களுக்கு சாதகமாக இருக்கும். தகுந்த நேரத்தில் தகுந்த முடிவு எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கிக் காணப்படும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். தோல்விகளை கண்டு துவண்டு போகாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை அவசியம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நலம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்க்ளுக்கு புது யோகம் உண்டாகும்.