Today astrology: 30 ஆண்டுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு வருகை தருவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். அவை யார் யாருக்கு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
30 ஆண்டுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசிக்கு வருகை தருவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.
நவக்கிரங்களில் சனி பகவான் முக்கியமானவர்:
நவக்கிரங்களிலேயே சனி பகவான் முக்கியமானவர். சந்திரன், தினமும் மாறும் கிரகம் ஆகும்.vகுரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெயர்ச்சியாகும்.சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் போன்றவை மாதம் ஒருமுறை மாறும் கிரகம் ஆகும். ராகு, கேது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும்.
ஆனால், மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, தனது ராசியை மாற்றிவிடுகிறது. இறுதியில், சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும். எனவே, நவக்கிரங்களில் சனிபகவான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகமாக கருதப்படுகிறார்.
ஜோதிடத்தின் படி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. சனிபகவான் ஒரு கொடூரமான கிரகமாக கருத்தப்படுவதால், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார்.
அதன்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு,ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இது இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.அவை யார் யாருக்கு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு சனி அமர உள்ள இடம் நன்மைகள் தரக்கூடியது. இதனால், உங்களின் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முழுமை பெற ஆரம்பிக்கும். தொழிலுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற காலம். புதிய தொழில் துவங்கும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலையில் பெரிய முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் உண்டாகும். விரும்பிய வேலை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும். இதுவரை தடைபட்ட நன்மையான காரியம், ஒன்று நிறைவேறும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த சனி அதிசார பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். லாபகரமான மாற்றங்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கு அதற்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வழக்கு விஷயங்களில் சட்ட முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
கன்னி:
சனி பகவானின் சஞ்சாரம் கன்னி ராசிக்கு சாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்காக முயன்று வரக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள், வெற்றி கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். திடீர் பண வரவு, பண ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவார்கள். நீங்கள் செய்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்.
துலாம்:
சனி பகவானின் சஞ்சாரம் துலா ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்கள் உண்டாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். தொழில், வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். விரும்பிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் முடிவாகும்.