Face pack: பத்து பைசா செலவு செய்யாமல் முகத்தில் வடுக்கள், பருக்கள், தழும்புகளை நீக்கும்...இயற்கை ஃபேஸ் பேக்!

Anija Kannan   | Asianet News
Published : Mar 14, 2022, 10:06 AM ISTUpdated : Mar 14, 2022, 10:11 AM IST
Face pack: பத்து பைசா செலவு செய்யாமல் முகத்தில் வடுக்கள், பருக்கள், தழும்புகளை நீக்கும்...இயற்கை ஃபேஸ் பேக்!

சுருக்கம்

Face pack: உங்களுடைய முகத்தை பராமரிக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள் உங்கள் சமையல் அறையில் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

 நம்முடைய முகம் பளபளப்புடன் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை, எல்லோரின் மனதிலும் இருக்கும். ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், இயற்கை நமக்கு தந்த மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்களை தவிர்த்து வருகிறோம். மாறாக, கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை நம்முடைய முகத்திற்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் சிலருக்கு  எப்போதும், முகத்தில் வடுக்கள், பருக்கள், தழும்புகள், சுருக்கங்களும் மற்றும் பொலிவின்மையை ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களுடைய முகத்தை பராமரிக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள் உங்கள் சமையல் அறையில் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

டிப்ஸ் 1:

முதலில் வறண்ட சருமம் கொண்டவர்கள் கொஞ்சம் பன்னீரை பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்கு உலர்ந்த பின்பு முகத்தை அலம்பினால், வறண்ட சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

டிப்ஸ் 2: தக்காளி பேஸ் பேக்..

சருமத்தில் எங்காவது பருக்கள் வந்து சென்ற தழும்புகள், கீறல், வடுக்கள் போன்றவை ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதாக மறைவது இல்லை.  இதனால் நம்முடைய முகம் ரொம்பவே வயதானது போல தோற்றமளிக்க ஆரம்பித்துவிடும். 

தேவையான பொருட்கள்:

தக்காளி பழ சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் 

தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்

இவற்றை சரி செய்வதற்கு, நீங்கள் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி பழ சாற்றின் விதைகள் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். 

இந்த கலவையை தழும்புகள் இருக்கும் இடத்தில் மட்டும் அல்லாமல், முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டு விடுங்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஊறிய பின்பு முகத்தை அலம்பி விடுங்கள். இது போல வாரம் ஒருமுறை செய்து வர வடுக்கள், தழும்புகள் எது இருந்தாலும், அது இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் நீங்கிவிடும்.

டிப்ஸ் 3: மக்காச்சோள பேஸ் பேக்..

மக்காச்சோள மாவு - ஒரு டீஸ்பூன்

தயிர் - ஒரு டீஸ்பூன்

மக்காச்சோள மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு முகம் முழுவதும் மசாஜ் செய்து, 15 நிமிடம் உலரவிட்டு கழுவினால் முகம் பளபளவென  இருக்கும். இது நம்முடைய முகத்தில், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், சொரசொரப்பு தன்மை போன்றவற்றை நீங்கி   பொலிவுற செய்கிறது.

டிப்ஸ் 4:  வெள்ளரி  பேஸ் பேக்..

வெள்ளரி சருமத்தை குளிர்ச்சியாக்கும், இது வறண்ட சருமத்திற்கு சிறந்தது. வெள்ளரிக்காயை அரைத்து சாற்றை முகத்தில் தடவவும். நீங்கள் கூழை ஃபிரிட்ஜில் வைத்து  அது குளிர்ந்தவுடன், கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்க ஐ மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.

இது உங்கள் முகத்தில், கரும்புள்ளிகளை நீங்கி முகத்தை பொலிவாக மாற்றுகிறது.

பப்பாளி ஃபேஸ் பேக்:

 கரும்புள்ளிகள் மற்றும் டேன் போன்றவற்றால் சருமம் சோர்வாக இருந்தால்  இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதை முயற்சி செய்து பாருங்கள். ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து’ உங்கள் தோலில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு கழுவவும். இப்படி, வாரம் இரண்டு முறை செய்தால் நீங்கள் தான் இந்தியாவின் அடுத்த இளவரசி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 மேலும் படிக்க....Watermelon juice: விலை குறைந்த வாட்டர் லெமன்...கோடையில் உடல் சூட்டை தணிக்கும்... மூன்று வகை தர்பூசணி பானம்..!

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க
வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்