Today astrology: ஜோதிடத்தின் படி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் சொத்துக்களுக்குக் காரணமான சுக்கிரன் கிரகம் விரைவில் ராசியை மாற்றப் போகிறது. அந்த வகையில், சிலர் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆளுமையும் வித்தியாசமாக இருக்கும். சிலர் மிகவும் புத்திசாலிகளாகவும், சிலர் கடின உழைப்பாளிகளாகவும், சிலர் வள்ளல்களாகவும், சிலர் சிக்கன பேர்வழிகளாகவும் இருப்பார்கள். அந்த வகையில், சிலர் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி, மார்ச் 31ம் தேதி காலை சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். தற்போது, சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக கருதப்படுகிறது. சுக்கிரனின் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் அதாவது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சுக்கிரன் காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார வளம் பெறுவார்கள். இதனுடன், வியாபாரத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணத்திற்கு 2வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார முன்னேற்றம் மிக வேகமாக இருக்கும்.
மேலும், இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அதிர்ஷ்டமும் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களது கருணை மற்றும் அன்பு காரணமாக, இவர்கள் அனைவரது இதயத்தையும் எளிதில் வென்றுவிடுவார்கள்.
மிதுனம்:
சுக்கிரன் மிதுன ராசிக்கு 9ம் வீட்டில் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருந்து சஞ்சரிப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். இதனுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் பல பண லாப ஆதாரங்கள் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீடு, சொத்துக்களை வாங்கலாம். மேலும், கூட்டுத் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இவர்கள் பெரும்பாலும் கடின உழைப்பாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களது வாழ்வில் செல்வத்துக்கும் பெருமைக்கும் எப்போயும் பஞ்சமிருக்காது. இவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும்.குடும்ப உறுப்பினர்களால் நிதி ஆதாயம் ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். காதல் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். உத்யோகத்தில் பலமான பொருளாதார பலன்கள் ஏற்படும். கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சம்பள உயர்வு இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உண்மையில் சுக்கிரனின் சஞ்சாரம் இரண்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது, செல்வம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் இழந்த பணத்தை திரும்பப் பெறுவர். இது தவிர, வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் செய்யலாம்.