Today Astrology: சனியின் நட்சத்திர பெயர்ச்சி....இந்த 7 ராசிக்கு ராஜா யோகம்..! இன்றைய ராசி பலன்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 27, 2022, 06:22 AM IST
Today Astrology: சனியின் நட்சத்திர பெயர்ச்சி....இந்த 7 ராசிக்கு ராஜா யோகம்..! இன்றைய ராசி பலன்..!!

சுருக்கம்

Today Astrology: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறார். ஆனால், சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறார். ஆனால், சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார். 

சனி நட்சத்திரம் மாற்றி அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். சனி, மகரம், கும்பம் ஆகிய இரு ராசிகளும் அவிட்டம் நட்சத்திரத்தின் கீழ் வருகின்றன. இந்த சனியின் நிலை மாற்றம் 7 ராசிக்காரர்களுக்கு 13 மாதங்களுக்கு சுப பலன்களைத் தரும்.

ஜோதிட சாஸ்திரப்படி மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் தனது ராசியை மாற்றிவிடுகிறது. ஆனால் பிப்ரவரி 18, 2022 அன்று, சனி கிரகம் தனது நட்சத்திர மண்டலத்தை மாற்றி அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்தது. சனி அடுத்த 13 மாதங்களுக்கு இந்த ராசியில் இருப்பார், இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் 7 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முழுமை பெற ஆரம்பிக்கும். தொழிலுக்கு நேரம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, வருமானம் அதிகரிக்கும். நீண்ட பயணம் இருக்கலாம். சொத்து வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற காலம். வேலையில் பெரிய முன்னேற்றம் அடையலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் உண்டாகும். பயணங்கள் இருக்கும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் உண்டாகும். தொழிலுக்கு நல்ல காலம் அமையும். லாபகரமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும். உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம்.

துலாம்:

சனியின் உதயத்தால் துலா ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்கள் உண்டாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்ற நேரமாக உள்ளது. சனியின் உதயம் இவர்களது திரிகோண ராஜயோகத்தை உண்டாக்குகிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவார்கள். நீங்கள் செய்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் விரைவில் பலனளிக்கும். நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்