Horoscope: குருவின் மாற்றத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும்...அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 21, 2022, 06:17 AM IST
Horoscope: குருவின் மாற்றத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும்...அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..!!

சுருக்கம்

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, குருவின் மாற்றத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும்..

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, குருவின் மாற்றத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும்..

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் நிலை மோசமாக இருக்கும்போது சுப மற்றும் அசுப விளைவுகள் இரண்டும் காணப்படுகின்றன. அதனால் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் நிகழ்கின்றன. 

திங்கட்கிழமை உங்களுக்கு வேலையில் வெற்றியைத் தரும். வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். மகர ராசிக்காரர்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திங்கட்கிழமை உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எங்களுக்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்: 

பத்திரிக்கை தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன்கள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சொத்துப் பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மேஷம்: 

இன்றைய நாள் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கையில் எடுக்கும் எந்தப் பணியிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் வேலையில் நல்ல பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்லவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள், அவர்கள் வேலையில் வெற்றி பெற உதவுவார்கள். உங்கள் பிரகாசமான எதிர்காலத்தில் புதிய நட்பு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நல்லுறவு உருவாகும்.

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மந்தமான நாள்.


கடகம்: 

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். பயணங்கள் கைகூடும் நாள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்