Teeth Whitening: பற்களில் கறை பிரச்சனையில் இருந்து நீங்கி உங்கள் பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா..? கீழே குறிப்பிட்டுள்ள டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய நவீன காலத்தில், வேப்பங்குச்சி, ஆலங்குச்சி போன்றவற்றால் பல் துலக்கும் பழக்கம் மலையேறிவிட்டது. சிறுவர்கள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை பல் தேய்பதற்கு விதவிதமான் பிரஷ் பயன்படுத்து கின்றனர். ஆனால் பெரும்பாலோனோர் இதில் பல் துலக்க ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு சிலர் பற்களை சுத்தம் செய்வதற்கு, சாம்பல் செங்கல் தூள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் பல் வலி, ஈறு வீக்கம், சீல் வடிதல் உள்ளிட்ட பலவேறு பிரச்சனைகள் ஏற்படும்.
undefined
பற்கள் மஞ்சளா இருக்கா..?
பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும்.
பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா..? வழிமுறைகள்...
எலுமிச்சை சாறு:
இந்த பழக்கம் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு மற்றும் கடுகு எண்ணெய் கலந்து பிரஷ் செய்யவும். அதுமட்டுமின்று, எலுமிச்சை சாருடன் தேன் கலந்து, சாப்பிட்டு வர பற்கள் பளிச்சென மாறும். பல் தேய்க்கும் போது பிரஷ்ஷில் உப்பை தொட்டு எலுமிச்சை சாறு சில சொட்டுகளையும் சேர்த்து பல் தேய்த்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.
ஆப்பிள் வினிகர்:
ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, பிரஷ் மூலம் பற்களில் தேய்க்கவும். படிப்படியாக, உங்கள் பற்களின் மஞ்சள் நிறம் மறைந்துவிடும். இதில் உள்ள அமில கூறுகள் பற்களை வெண்மையாக வைத்திருக்கும். தண்ணீர் இல்லாமல் கண்டிப்பாக பயன்படுத்தி விடாதீர்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடுகு எண்ணெய் மற்றும் உப்பு:
அரை டீஸ்பூன் கடுகு எண்ணெயில் சிறிது உப்பைக் கலந்து, இந்த பேஸ்ட்டை விரலால் பற்கள் மற்றும் ஈறுகளில் லேசாக மசாஜ் செய்யவும். நீங்கள் அதை தினமும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பற்களின் மஞ்சள் நிறம் நீங்குவதுடன் பையோரியா பிரச்சனையும் நீங்கும்.
புதினா இலை:
முல்தானி மெட்டியை பற்களின் மேல் தேய்த்து வந்தாலும் மஞ்சள் நிற கறை நீங்கும். புதினா இலையை காய வைத்து பொடி செய்து, அதை கொண்டு பல் துலக்கி வந்தாலும் பற்கள் பளிச்சென மாறும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் உப்பு நீர்
பழுத்த ஸ்ட்ராபெர்ரியை எடுத்து, நசுக்கி பற்களில் தேய்த்தால் போதும், பற்களின் மஞ்சள் நிறம் போய்விடும். இதைச் செய்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கமாக, மிதமான வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளித்தால், உங்கள் பற்கள் சுத்தமாகி, ஈறுகளில் ஏற்படும் தொற்று நீங்கும்.