Tooth sensitivity: பல் கூச்சமா? கொரோனா காலகட்டத்தில்...வீட்டிலேயே சமாளிக்க ஈஸியான 5 வழிமுறைகள்...

By Anu KanFirst Published Jan 29, 2022, 9:38 AM IST
Highlights

பல் கூச்சம் நம்மில் பலருக்கும் வரும், அசௌகர்யமான பிரச்சனையாகும். கொரோனா கால கட்டத்தில், வீட்டில் இருந்தே பல் கூச்சம் தற்காலிமாக போக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி பாருங்கள்.

பல் கூச்சம் நம்மில் பலருக்கும் வரும், அசௌகர்யமான பிரச்சனையாகும். இந்த பிரச்சனை நம்மை இயல்பாக இருக்க விடாது.  இயல்பாக பேச முடியாது. இதன் வலி, சில சமயங்களில் பற்களை தாண்டி நரம்புகளிலும் வலி உணர்வை ஏற்படுத்தும். 

பல் வலிக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும். இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம். சிலருக்கும் இனிப்பாகவோ, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ சாப்பிட்டால் பல் கூச்சம் ஏற்படும்.

குழந்தைகளுக்கு ஐஸ்கீரிம், சாக்லேட் போன்றவை பல் கூச்சத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை ஏற்கெனவே பல் சொத்தை ஏற்பட்டு, அந்த சொத்தையை சில அடைத்திருப்பார்கள். அந்த அடைப்பு உடைந்திருந்தால் கூட கூச்சம் ஏற்படலாம். சிலர் பல் விளக்கும் முறை கடினமாக இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் பிரஷ் மற்றும் முறை காரணமாக பல்லில் தேய்மானம் ஏற்படலாம்.

இன்னும், சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை மற்றும் உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். இதனால் அதிக அமில சுரப்பு காரணமாக பல் கூச்சம் ஏற்படலாம். அதிக அமிலம் சார்ந்த உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதன் காரணமாக கூட பல்லின் கூச்சம் ஏற்படலாம்.

இதனை முழுவதுமாக சரி செய்வதற்கு, மருத்துவமனை செல்வது நல்லது. ஆனால், கொரோனா கால கட்டத்தில் வீட்டில் இருந்தே பல் கூச்சம் தற்காலிமாக போக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி பாருங்கள்.

உப்பு தண்ணீரில் கொப்பளிப்பு:

வாய் கொப்பிளிப்பது ஆங்கிலத்தில் (gargle) ஆகும். இந்த பற் கூச்சப் பிரச்சனைக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய சிகிச்சை முறையாகும். தினமும் இரண்டு முறை வாயை உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாயின் ஆரோக்கியம் மேம்படும். இது இயற்கையான மவுத்வாஷ். வாயில் ஏற்படும் அலர்ஜிக்களைக் கட்டுப்படுத்தும். 

செய்முறை:

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர். அரை தேக்கரண்டி உப்பு. இந்தக் கலவையை 30 விநாடிகளாவது வாயில் வைத்து கொப்பளித்து வருவது நல்ல பலன் தரும்.

கிராம்பு:

கிராம்பை நசுக்கி அதை பற்கூச்சம் உள்ள இடத்தில் வைத்தால் சரியாகிவிடும். இது நம் முன்னோர்களின் வைத்திய முறையாகும் 

தேனால் கொப்பளித்தல்:

ஒரு டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்து வர பற்கூச்சம் நீங்கும். தேனில் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் பண்பு இருக்கிறது. தேன் நல்ல வலி நிவாரணியும் கூட. தீக்காயங்களில், சிராய்ப்புகளில் மருந்தை தேனில் குழைத்துப் போடுவதை நாம் பார்த்திருப்போம்.

மஞ்சளும் உப்பும் கொண்டு பல் துலக்கலாம்:

மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புள்ள பொருள். இதை தூள் உப்புடன் சேர்த்து தொடர்ந்து பற்களை தேய்த்து, மசாஜ் பண்ணுவதுபோல் தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்து வந்தால் பற்கூச்சம் நீங்கும். 1 டீ ஸ்பூன் மஞ்சள், அதில் 1/2 டீ ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அவ்வப்போது செய்து கொள்ளலாம்.

கிரீன் டீ (Green Tea)யிலும் கொப்பளிக்கலாம்:

உப்பு நீர், தேன் கலந்த நீர் மட்டுமல்ல க்ரீன் டீயிலும் வாயை கொப்பளிக்கலாம். இது ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். க்ரீன் டீயை மவுத் வாஷ் போல் ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தலாம்.

அதேபோன்று, பல் கூச்சம் தொடங்கும் சமயத்தில், புளூரைட் உள்ள மவுத்வாஷ் பயன்படுத்தலாம். தூங்கும்போது பல்லினை கடிப்பவர்களுக்கு என பிரத்யேக மவுத் கார்டு  உள்ளது. அதனை தூங்கும்போது பயன்படுத்துவதன் மூலம் தேய்மானத்தை தடுக்கலாம். ஆனால், இவை எல்லாம் தற்காலிக மற்றும் ஆரம்ப நில பிரச்சினைகளுக்கான தீர்வே. இவற்றிற்கு உங்களின் பல் வலி சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.


 

click me!