Exercise: கொரோனோவை விரட்டி இதயம் காக்கும் இரண்டு முத்திரை! வாழ்வு வளமாகும்...கவலை, டென்ஷன், கோபம் குறையும்..!

By Anu KanFirst Published Jan 29, 2022, 7:35 AM IST
Highlights

கொரோனோவை விரட்டி இதயம் காக்கும், இந்த இரண்டு முத்திரையையும் தினமும் இரண்டு முறை செய்தால், வாழ்வு வளமாகும்.  உங்கள் இதயத்துடிப்பு சீராகும்.
 

இதயத்தை பாதுகாப்பது மனிதனின் முதற் கடமையாகும். உலகம் முழுவதிலும் கொரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், பலர் உடல் ரீதியாகவும், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் கிருமியால்  பலர் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள அனைவரும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறலாம். 

இது போன்ற நிலையில் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள தினமும் எளிய உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும். நாம் இங்கு பார்க்க இருப்பது, முத்திரைகள் மூலம் எப்படி நமது இதயத்தை பாதுகாப்பது. அவை என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அபான வாயு முத்திரை (இருதய முத்திரை) : 

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் கண்களை திறந்து நடுவிரல் மோதிர விரலை கட்டைவிரலுடன் சேர்த்து வைக்கவும்.  ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும்.

சுண்டு விரல்மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும்.  படத்தை பார்க்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.

சங்கு முத்திரை: 

விரிப்பில் நிமிர்ந்து அமரவும்,  விரிப்பில் அமர முடியாத வர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.

இரண்டு கை விரல்களையும் பின்னிக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளை ஒட்டிக் கொள்ளுங்கள். கட்டைவிரல்களை சேர்த்து படத்தில் உள்ளது போல் வைக்கவும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல், ஐந்து நிமிடங்கள் இருக்கவும்.  

இந்த இரண்டு முத்திரையையும் காலை,  மதியம், மாலை சாப்பிடும்முன் செய்யவும்.  மதியம் செய்ய முடியாதவர்கள் காலை, மாலை மட்டும் செய்யவும்.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இவை உங்கள் இதயத்துடிப்பை சீராக்கும்.

கடைபிடிப்பது எப்படி?

முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.

பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, ​​மூன்று முறை வலிமையாக இரும வேண்டும். இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.

மனிதனின் மனதில் மன அழுத்தம், கவலை, டென்ஷன், கோபம் கூடாது.  மனிதன் தனது உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவையே உட்கொள்ள வேண்டும்.

 

உணவு முறைகள்: 

பூசணி விதை, சூரியகாந்தி விதை ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவை பெருக்கி கெட்ட கொழுப்பை நீக்குகிறது. பீன்ஸ், பட்டாணி, ஆரஞ்சு, மாம்பழம், பூண்டு, வெங்காயம், மிளகு, திராட்சை அதிகம் உண்ணவும். 
முட்டை கோஸ், தக்காளி, முருங்கைக்கீரை உணவில் அடிக்கடி எடுக்கவும். 

click me!