Coconut: நீங்கள் ஃபிட்டாக வேண்டுமா..? தேங்காயில் இருக்கு மகத்துவம்... தினமும் ஒரு பீஸ் சாப்பிட்டால் போதும்..!!

By Anu KanFirst Published Jan 28, 2022, 1:14 PM IST
Highlights

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்ன என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்திய பாரம்பரிய சமையலில், இடம்பெறும் ஒரு முக்கிய உணவுப் பொருள் தேங்காய் ஆகும். இன்றும் நம்முடைய வீடுகளில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் குறைவு. அந்த அளவிற்கு தேங்காயின் மவுசு கொடி கட்டி பறக்கிறது. அதற்கு முக்கிய காரணம், உணவு பொருட்களில் கலப்படமில்லாத தூய்மையான ஒன்றாகும்.அதுமட்டுமின்றி, தேங்காயில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளையும், பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும் இருப்பதால் இது உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது.

அதுமட்டுமின்றி, தேங்காயில் புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்களும் வைட்டமின் C,வைட்டமின் B போன்ற அனைத்து தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்ன என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கலுக்குத் தீர்வு:  

பச்சைதேங்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்க உதவியாக உள்ளது. எனவே இதனை தினமும் சாப்பிடும் போது எவ்வித மாத்திரை மருந்துகள் எடுக்காமல் இயற்கையான முறையில் மலச்சிக்கலை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

தேங்காய்ப் பால்:

வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாக, அரை மூடி தேங்காயிலிருந்து எடுத்த பாலில், சோம்பு கால் ஸ்பூன் கலந்து, குடிக்க வேண்டும்.

இதய ஆரோக்கியம்:

பொதுவாக தேங்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த உதவியாக உள்ளது. எனவே இரவு தூங்கும் முன்பு அல்லது ஏதாவது ஒரு வேளைகளில் தேங்காய் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், இதய ஆரோக்கியம் மேம்படும். இதோடு இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.

இளநீர்:

சீரகம், சிறுபயிறு தலா இரண்டு கிராம் எடுத்து, இளநீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். ஊறிய சீரகம் மற்றும் சிறுபயிறை நன்கு மென்று சாப்பிடலாம். தீவிரமான நீர்க்கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்ச னைகள் குணமாகும்.

உடல் எடை குறைக்க உதவும்:

தேங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவில் உள்ளன. இது உங்கள் உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் தேங்காய் சாப்பிடும் போது வயிறு நிறைந்ததுப்போல் நாம் உணர்வோம். எனவே தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடும் என்ற எண்ணம் வராது. இதனாலே நம் உணவில் டயட்டாக எடுத்துக்கொண்டு உடல் எடையைக்குறைக்கலாம்.

தூக்கமின்மை பிரச்சனைக்குத் தீர்வு:

இன்றைய காலக்கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனை என்பது பலரும் பொதுவானதாகிவிட்டது. சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே நாம் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நல்ல தூக்கும் வரும். இனி தூங்குவதற்காக மாத்திரைகள் சாப்பிடுவதற்குப் பதில், கொஞ்சம் தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும். முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப்பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர். எனவே, தேங்காயை நம் உணவு முறையில் சேர்த்துக்கொள்வதால், இதுபோன்ற ஏராளமாக நன்மைகளை  பெறலாம்.   
 

click me!