Omicron new symptom: ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டாலும்...விடாது துரத்தும் பிரச்சனைகள்! WHO எச்சரிக்கை...!

By Anu KanFirst Published Jan 29, 2022, 8:27 AM IST
Highlights

கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், தற்போது ஓமிக்ரான், டெல்ட்டா வைகை கொரோனா மாறி மாறி தாக்கி வரும் நிலையில், அதன் அறிகுறைகளை வைத்து வேறுபாடு கண்டறியப்படுகிறது. டெல்ட்டா வகை கொரோனாவை விட,  ஓமிக்ரான்மா றுபாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவு எனினும், பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார், 2,90,000 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 573 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் நாட்டில் இறப்பு எண்ணிக்கை 4,91,900 ஆக உள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில், உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பொதுவான காய்ச்சலின் அறிகுறிகளைப் போல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிறகு, இரவில் வியர்வை, தொண்டை வலி மற்றும் முதுகு மற்றும் இடுப்பு வலி போன்ற அதிக பிரச்சனைகளை  ஓமிக்ரான் பாதிப்பு மக்கள் எதிர்கொண்டனர்.

சமீபத்தில், குமட்டல், வயிற்றுக்கடுப்பு  மற்றும் பசியின்மை போன்ற புதிதான சில அறிகுறிகள் சேர்க்கட்டிருந்தது. இப்படி, ஒவ்வொரு நாளும் மக்கள் எதிர்கொள்ளும் புதிய புதிய அறிகுறிகளை ஆராச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி காணப்படுகிறது. இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களில் தசை வலி பிரச்சனையும் காணப்படுகிறது. சிலர் சுவை இழப்பு, முதுகு, மற்றும் இடுப்பில் வலி இருப்பதாகவும் புகார் கூறுகின்றனர். இது நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதையெல்லாம் குறிப்பிட்டு, உலக சுகாதார அமைப்பின், டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஓமிக்ரான்  போன்ற புதிய மாறுபாடுகளை கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேசிய போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் மெல்ல குறையும் என்றும், ஒமைக்ரான் வீரியம் அதிகரித்து புதிய வகைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, தனிமை போன்ற விஷயங்கள்தான் தீவிர பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டில் பொதுமக்கள் அலட்சியம் காட்ட, வேண்டாம் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாகும்.
 

click me!