
மழைக்காலம் வந்தாலே கூடவே இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற தொற்றுகளும் வரும். அவற்றை குணமாக்க மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக வீட்டிலிருந்தபடியே குணமாக்கிவிடலாம். இதற்கு மிக எளிதான சில கை வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலத்திற்கு உதவும் சில கை வைத்தியங்கள் :
1. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 5 கிராம் எடுத்து பொடியாக்கி தினமும் காலை மாலை என இரு வேலையும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் சரியாகும்.
2. பனங்கற்கண்டு, சித்தரத்தை இரண்டையும் சம அளவு எடுத்து கசாயம் செய்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் வறட்டு இருமல், சளி குணமாகிவிடும்.
3. தும்பை இலைகளை நல்லெண்ணெயில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் தலைவலி குணமாகிவிடும்.
4. முசுமுசுக்கை இலையை பொடியாக நறுக்கி அதை சின்ன வெங்காயத்துடன் நெய்யில் போட்டு வதக்கி பகலில் சாப்பிட்டு வந்தால் மூச்சு திணறல், ஆஸ்துமா குணமாகும்.
5. கருவேல மர சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் காய்ச்சல் குணமாகும்.
6. தூதுவளை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆடாதோடா, சங்கன் இலை ஆகியவற்றை கசாயமாக செய்து குடித்தால் காய்ச்சல், ஜலதோஷம் காணாமல் போய்விடும்.
7. எலுமிச்சை பழத்தின் சாற்றை சூடான தீயில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
8. ஒரு கப் சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு சரியாகிவிடும்.
9. குமட்டல் பிரச்சனை ஏற்பட்டால் வெந்தயத்தின் தண்டை வாயில் போட்டு சுவைக்கவும்.
10. முருங்கைக் கீரையின் தளிரை இடித்து அதிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்ன மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் காணாமல் போய்விடும்.
மழைக்காலத்தில் நோய்கள் வராமல் தடுக்க சில தற்காப்பு நடவடிக்கைகள் :
- மழைக்காலத்தில் வெளியே செல்லும்போதெல்லாம் கண்டிப்பாக கையில் குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லுங்கள். மழையில் நனைந்து விட்டால் வீட்டிற்கு வந்தவுடன் ஈரமான உடைகளை மாற்றிவிடுங்கள். உலர்ந்த ஆடைகளை அணியுங்கள். கை கால்களை சோப்பு போட்டு மறக்காமல் கழுவி விடுங்கள். தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.
- மழைக்காலத்தில் வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க கொசு வலையை பயன்படுத்துங்கள்.
- அதுபோல சுத்தமான தண்ணீரை குடிக்கவும். அதுவும் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடியுங்கள். அது நல்லது. ஆரோக்கியமான சூட் கூட குடிக்கலாம். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் சாப்பிட வேண்டாம்.
- புதிதாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லது. பிரிஜில் வைத்து உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். அதுபோல வெளி உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழிவு பிறகுதான் சாப்பிட வேண்டும்.
- கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால் நோய் கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
மேலே சொல்லப்பட்டுள்ள கை வைத்தியங்கள் மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்களுக்கு மிகவும் அருமருந்தாகும். ஒருவேளை கை வைத்தியத்திற்கு எதுவும் சரியாகவில்லை என்றால் தயங்காமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். முக்கியமாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் எந்த ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.