Face glow: முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்க...? பாதாம் எண்ணெய் செய்யும் அற்புதங்கள்!

By manimegalai a  |  First Published Jan 20, 2022, 12:13 PM IST

குறைத்த செலவில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பதை கீழே பார்க்கலாம்.


சருமம் அதிலும் முகத்தின் சருமம். அழகான தோற்றத்திற்கு இன்றியமையாததது. அதற்காக பெண்கள் பார்லருக்கு சென்று பேஷியல், இதர சிகிச்சைக்கு என பணத்தை அதிகம் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர், தங்கள் முக அழகை மேம்படுத்துவதற்கு அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, அக்குபஞ்சர், ஹோமியோபதி என்று பல்வேறு சிகிக்சை முறைகளை கையில் எடுத்துள்ளனர்.

ஆனால், இன்றைய கரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியே செல்வது பாதுகாப்பற்ற ஒன்று. எனவே, குறைத்த செலவில், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பதை கீழே பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், முக சரும பராமரிப்பிற்கு வீட்டில் இருக்கும், பொதுவாக சந்தையில் எளிதாக கிடைக்கும் பாதாம் எண்ணெய் அனைத்து விதமான தழும்புகள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் பருக்கள் ஆகியவற்றை அகற்றி, செலவில்லாமல் ஒரு கோல்டன் பேஷியல் செய்து கொண்ட பலனை பெறலாம். 

பாதாம் பருப்பில் (Almonds) ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதே போன்று பாதாம் எண்ணெய், சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் தூங்கும் முன் தினமும் பாதாம் எண்ணெயைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பல சரும பிரச்சனைகள் நீங்கும். பாதாம் எண்ணெய் சருமத்தில் உள்ள தழும்புகள் புள்ளிகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.

பாதாம் எண்ணெயில் உள்ள ஊட்டசத்துக்கள்

பாதாம் எண்ணெயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ, டி, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இவற்றில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. பாதாம் எண்ணெயின் இந்த பண்புகள் அனைத்தும் சரும பிரச்சனைகளை நீக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.

பாதாம் எண்ணெயை முகத்தில் பயன்படுத்தும் முறை

நீங்கள் பயன்படுத்தும் எந்த மாய்ஸ்சரைசிங் லோஷனிலும் பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தடவவும். இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயை தடவி வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முகத்தை மசாஜ் செய்யவும்

தழும்புகள், கரும்புள்ளிகள் நீங்க, இரவில் தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யவும். கைகளில் சில துளிகள் எண்ணெயை எடுத்து உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்தால், எண்ணெய் சற்று சூடாகும். பிறகு முகத்தில் தடவவும். பின்னர் மென்மையாக கைகளால் மசாஜ் செய்யவும்.

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைந்துவிடும்

பாதாம் எண்ணெய் சருமத்தின் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸை நீக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உண்மையில், இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள சுருக்கங்களை படிப்படியாக நீக்குகிறது. இதுவே முதுமை தோற்றத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

2. முகம் அழகாக தோன்றும்

பாதாம் எண்ணெய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும், இது வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தேவதை போல ஒவ்வொரு நாளும் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

click me!