குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையா? குணப்படுத்த வாழைப்பழம் போதும்!

By Kalai Selvi  |  First Published Jan 3, 2025, 5:29 PM IST

Cracked Heels in Winter : குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பால் அவதிப்படுகிறீர்களா? சில வீட்டு வைத்தியமூலம் அதை சுலபமாக சரி செய்து விடலாம். அது  என்ன என்று இங்கு காணலாம்.


குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனை வருவது பொதுவானது. ஆனால் குதிகால் வெடிப்பு வானிலை மாற்றத்தால் மட்டுமின்றி, உடலில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள், தைராய்டு, மூட்டு வலி, போன்ற பிரச்சனைகளாலும் ஏற்படுகிறது. இதை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் மிகவும் தீவிரமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. சில சமயங்களில் கடுமையான வலி இரத்தப்போக்கு கூட ஏற்படும்.  அந்த வகையில் குளிர்காலத்தில் குதிகால் வெடிவு பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதற்காக மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள். ஆம், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து குதிகால் வெடிப்பு பிரச்சனையை சரி செய்து விடலாம்.. இப்போது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு பிரச்சனையை சரி செய்ய சில டிப்ஸ்:

எலுமிச்சை:

இதற்கு ஒரு வாளியில் சூடான நீரை ஊற்றி அதில் எலுமிச்சை பழத்தின் சாறு, ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது வாளியில் உங்களது குதிகாலை சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு ஸ்க்ரப் கொண்டு உங்கள் குதிகாலை நன்கு தேய்க்க வேண்டும். இதனை அடுத்து காலில் சாக்ஸ் அணிந்து இரவு அப்படியே தூங்கிவிடவும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலே குதிகால் வெடிப்பு மாயமாக மறந்து விடும்.

தேன்:

ஒரு வாளியில் சூடான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேன் சேர்த்து அந்த நீரில் உங்களது குதிகாலை சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குதிகாலை ஸ்கிராப் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். அதன்பின் பாதத்தை சூடான நீரில் கழுவுங்கள். இதை தினமும் செய்தால் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

இதையும் படிங்க:  வெறும் 7 நாட்களில் பாத வெடிப்பு மறைய சூப்பரான டிப்ஸ்!!

தேங்காய் எண்ணெய்:

குதிகால் வெடிப்புள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். பிறகு காலை எழுந்தவுடன் குதிகாலை கழுவவும். இந்த முறை மிகவும் எளிதான மற்றும் பயனுள்ளதானது.

இதையும் படிங்க:  பாதவெடிப்பு அடிக்கடி வருதா? எலுமிச்சையை கொண்டு இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்க..நம்ப முடியாத பலன் கிடைக்கும்..

கற்றாழை:

ஒரு வழியில் சூடான நீரை நிரப்பி அதில் குதிகாலை சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு கற்றாழை ஜெல்லை குதிகாலில் தடவி இது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் சாதாரண நீரில் கழுவுங்கள்.

வாழைப்பழம்:

குதிகால் வெடிப்புக்கு வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நெகிழ்ச்சி தன்மையை அளிக்கிறது. மேலும் இது இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும்.. இதற்கு 15-20 வாழைப்பழ தோலை கொண்டு வெடிப்புள்ள பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும் பிறகு தண்ணீரில் கழுவவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் சிறந்த முடிவுகள் பெறுவீர்கள்.

வாஸ்லின்:

பெரும்பாலான வீடுகளில் வாஸ்லின் இருக்கும். வேஸ்லினுடன் எலுமிச்சை சாறு கலந்து அதை குதிகால் வெடிப்பில் தடவி, சாக்ஸ் அணிந்து, பிறகு காலையில் சூடான நீரில் குதிகாலை கழுவ வேண்டும்.

click me!