Carpet Cleaning Tips : உங்கள் வீட்டில் இருக்கும் கார்பெட் அழுக்காக இருந்தால் அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
வீட்டின் அழகை பற்றி பேசினால் அதில் கார்பெட் கண்டிப்பாக இடம் பெறும். கார்பெட் வீட்டு அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். வீட்டின் எந்த அறையில் இதை வைத்தாலும் அந்த அறைக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். தற்போது பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கார்பெட் விற்கப்படுகின்றன. தரை விரிப்பை வீட்டில் பயன்படுத்துவதால் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்றால், குழந்தைகள் விளையாடும் போது மற்றும் செருப்புகளின் அழுக்குகளால் அவை எளிதில் அழுக்காகி விடும் மற்றும் அதன் நிறமும் மங்கி காணப்படும்.
முக்கியமாக அழுக்கான கார்பெட்டை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் பலர் அதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் கார்பெட்டை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு விட்டீர்களா? இத்தகைய சூழ்நிலையில் உங்கள் வீட்டில் இருக்கும் கார்பெட்டை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேக்யூம் கிளீனரை பயன்படுத்துங்கள்:
உங்கள் வீட்டில் இருக்கும் கார்பெட்டை சுத்தம் செய்ய வேக்யூம் கிளீனர் பயன்படுத்தலாம். இது கார்பெட்டில் இருக்கும் தூசி மண் முடி அழுக்கு ஆகியவற்றை சுலபமாக சுத்தம் செய்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை வேக்கம் கிளீனர் கொண்டு கார்பெட்டை சுத்தம் செய்தால், அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியம் வரவே வராது. நீண்ட நாள் உழைக்கும். மேலும் கார்பெட்டில் அழுக்குகளும் சேராது.
இதையும் படிங்க: சமையலறைல இருக்க பிளாஸ்டிக் டப்பா மீது படியும் கறை.. இந்த '1' பொருள் இருந்தா உடனடி சுத்தம்!!
சமையல் சோடா & வினிகர்:
கார்பெட்டில் இருக்கும் பிடிவாதமான கறைகளை அகற்ற சமையல் சோடா மற்றும் வினிகர் கலவையை பயன்படுத்தலாம். இதற்கு சமையல் சோடா மற்றும் வினிகர் இரண்டையும் நன்றாக கலந்து அதை கார்பெட்டில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு பிரஷ் கொண்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கார்பெட்டில் இருக்கும் கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும் மற்றும் துர்நாற்றமும் வீசாது.
இதையும் படிங்க: தலையணை உறை எண்ணெய் பிசுபிசுப்பா இருக்கா? சுத்தமாக்க சூப்பர் டிப்ஸ்..!!
ஸ்டெயின் ரிமூவர் ஸ்ப்ரே:
உங்கள் வீட்டு கார்பெட்டில் டீ, காபி சாக்லேட் அல்லது பிற பொருட்களின் பிடிவாதமான கறை இருந்தால் அதை சுத்தம் செய்வதற்கு ஸ்டெயின் ரிமூவர் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். இது எவ்வளவு மோசமான பிடிவாத கறைகளையும் சுலமாக அகற்றிவிடும்.
முக்கிய குறிப்பு:
கார்பெட்டை சுத்தம் செய்த பிறகு அதை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். வெயில் இல்லை என்றால் காற்றோட்டம் உள்ள அறையில் வைக்கலாம். கார்பெட்டில் ஈரம் இருந்தால் துர்நாற்றம் வீசும் ஈரப்பதம் காரணமாக கறைகள் ஏற்படும்.