
இனி “லிவ்விங் டூகெதர் “ னு சொல்லி ஒன்னா தங்குவிங்களா...?? வருகிறது பேராபத்து...!!!
ஆணோ , பெண்ணோ .....இரண்டு பேரை எடுத்துக்கொண்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் ...!...இதில் எந்த மாற்றமும் இல்லை.....
தற்போது மாறி வரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப, திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் ஒன்றாக தங்கி , கிட்டத்தட்ட திருமணத்திற்கு பின் வாழக்கூடிய வாழ்கையை வாழ்ந்து விடுகிறார்கள்.......
இதில் ஒவ்வொருநாளும், பல வில்லங்கங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.......
உதாரணமாக , கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் பிந்து ஆகியோர் பள்ளிக்காலத்திலிருந்தே நண்பர்களாக பழகி, பின் சென்னையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில், வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பெரும், “லிவ்விங் டூகெதர் “வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
காலபோக்கில், மகேஷ் பிந்துவை விட்டு சற்று விலக ஆரம்பித்து, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்......
மனமுடைந்த பிந்து,”தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல முறை அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக ” பிந்து சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ள சென்னை காவல்துறையினர், அவரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்......
தேவையா இது........இங்கு பாதிப்பது யார்...? ....புரிதல் வேண்டும் இன்றைய இளசுகளுக்கு........!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.