இதை படிச்சிட்டு , சொல்ல வேண்டியவங்களுக்கு மறக்காம சொல்லிடுங்க.........!!!

 
Published : Nov 04, 2016, 03:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
இதை படிச்சிட்டு , சொல்ல வேண்டியவங்களுக்கு மறக்காம சொல்லிடுங்க.........!!!

சுருக்கம்

இதை படிச்சிட்டு , சொல்ல வேண்டியவங்களுக்கு மறக்காம சொல்லிடுங்க.........!!!

பேஸ்புக்  விரும்பிகளே ..........இதை  கவனியுங்க .......

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி,அவர்களுடன் நெருக்கமாக இருக் கும் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சிலரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரை போலீஸார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போன்ற  சமூக வலைத்தளம் மூலம் நடைபெறும் , குற்றங்களை  தடுக்க,  உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் நமக்கு  என்ன  அறிவுரை   சொல்றாங்கனு   கேளுங்க ....!

அறிமுகம்  இல்லாத  நபரிடம்  உங்களை  பற்றிய  எந்த  விவரமும்  தெரிவிக்காதீங்க.....!!

முகம் தெரியாத நபர்களிடம் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி, கல்லூரி,அலுவலக முகவரி உள்ளிட்ட தகவல்களை பகிர வேண்டாம்

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்

அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்

நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக்கூடும் என்பதை மறவாதீர்கள்

அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்து விடுங்கள். அதுவும் பதிவு செய்யப் பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்

உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம்

குழந்தைகள், பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்களாக மாற்றப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்*.

உங்கள் password-ஐ குடும்பத் தினர் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்

யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள். இல்லை என்றால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். உங்களது ரகசியம் காக்கப்படும்.

சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்தியா முழுவதும் கடந்த இரு ஆண்டுகளில் 21 ஆயிரத்து214 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?
யாராலும் தோற்கடிக்க முடியாத நபராக மாற சாணக்கியரின் வழிகள்