Kidney Stone Diet in Tamil : நாம் நம்முடைய உணவுப் பழக்கத்தை சரியாக கடைப்பிடித்து வந்தால், சிறுநீரில் கற்கள் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி, ஆரம்பகட்ட சிறுநீரக கற்களையும் இதே உணவு பழக்கத்தால் கரைத்தும் விடலாம்.
சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக, குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் பல நோய்கள் நம்மை தாக்கும். ஆனால், நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் இருந்து யூரிக் அமில முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் அமிலமாக மாறி, சிறுநீர் கற்கள் ஏற்பட முக்கிய காரணமாக வகிக்கிறது. சிறுநீர் கற்கள் ஏற்பட மற்றொரு காரணம், மோசமான உணவுகள்தான். உண்மையில், சில உணவுகள் சிறுநீர் கற்கள் உருவாவதை அதிகரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சில உணவுகள் சிறுநீர் கற்கள் இல்லாத ஒருவருக்கும் சிறுநீர் கற்களை உண்டாக்குகிறது.
ஒரு நபருக்கு கிட்னியில் கற்கள் தோன்றி விட்டால் அது அவரது உயிரைக் கொல்லும் அளவுக்கு வலியை அவருக்கு கொடுக்கும். சிறுநீரக கற்கள் பெரியதாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால், இந்த பிரச்சனையின் ஆரம்ப நிலையை எளிய முறையிலேயே தடுத்துவிடலாம் தெரியுமா? ஆம், ஆரோக்கியமான உணவு முறையிலேயே அவற்றை குணப்படுத்தி விடலாம். நாம் நம்முடைய உணவுப் பழக்கத்தை சரியாக கடைப்பிடித்து வந்தால், சிறுநீரில் கற்கள் வராமல் தடுக்க முடியும். அதுமட்டுமின்றி, ஆரம்பகட்ட சிறுநீரக கற்களையும் இதே உணவு பழக்கத்தால் கரைத்தும் விடலாம்.
ஆகையால், உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக நீங்கள் சிறுநீரக கற்களை கரைக்க ஏதேனும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் முதலில் சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுவது தவிர்க்கவும். அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: சிறுநீரக கற்கள் பிரச்சனையா? அப்ப இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..பிரச்சினைக்கு குட் பை சொல்லுங்க..!!
எதை சாப்பிடக்கூடாது?
1. சிவப்பு இறைச்சி போன்ற அசைவு உணவுகள் சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழி வகுக்கும். அது போல, இனிப்புகள் மற்றும் காஃபின் சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதுவும் சிறுநீரகங்களில் கற்கள் உருவாக வழி வகுக்கின்றது.
2. மது குடிப்பதையும் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது உடலில் உள்ள நீர் அளவை குறைத்து சிறுநீர் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது.
3. அதிக உப்பு உள்ளடக்கம் கொண்ட உணவுகள் சிறுநீரக கற்களின் நிலையை மோசமாக்கிறது. அதிகப்படியான சோடியம் கால்சியம் உருவாவதை ஊக்குவிக்கிறது. எனவே சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் ஜங்க் ஃபுட், பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
4. சிட்ரஸ் பழங்கள் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருந்தாலும், இதன் அதிகப்படியான நுகர்வு ஆக்சலேட் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகும். எனவே, சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் இவற்றை சாப்பிடுவது தவிர்க்கவும்.
5. சோடா குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் இவற்றை குறிப்பதே தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது பிரச்சனையை மேலும் மோசமாக்கும். காரணம், இதில் பாஸ் பாரிக் அமிலம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: பீர் குடித்தால் சிறுநீரக கல் கரையுமா? ஆய்வுகள் கூறும் உண்மை இதோ..!!
என்ன சாப்பிடலாம்?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D