Morning Sex Benefits : குளிர்காலத்தில் அனைவரும் சூடாக இருக்க விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக, குளிர்காலத்தில் காலையில் உடலுறவு கொள்வதால் உடல் சூடாக இருக்கும். எனவே, காலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம்.
குளிர்காலத்தில் காலையில் எழுவது கடினமான காரியங்களில் ஒன்றாகும். இதனால் குளிர்காலத்தில் சீக்கிரம் எழுவது நாம் விரும்புவதில்லை. ஆனால், படுக்கையில் உஷ்ணத்தைத் தரும் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக இள வாய்ப்பு உண்டு. அந்தவகையில், குளிர்காலத்தில் காலையில் உடலுறவு கொண்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில், இரவில் உடலுறவு கொள்வதற்கு பதிலாக, காலையில் உடலுறவு வைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றது. இப்படி செய்வதன் மூலம், உங்களுக்கு உங்கள் துணை இடமிருந்து ஆற்றல் கிடைக்கும். ஆகையால், குளிர்காலத்தில் காலையில் உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வது ஏன் முக்கியம் என்பதையும், அதனால் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது இந்த கட்டுரைகள் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஆண்கள் இப்படி பண்ணினால் பெண்களுக்கு ரொம்ப புடிக்குமாம்!!
குளிர்காலத்தில் காலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
1. ஆற்றல் நிறைந்தது:
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர், பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் நாள் முழுவதும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சரியான நேரத்தை செலவிட முடியாமல் இருக்கிறார்கள். அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் மாலை அல்லது இரவு வீட்டிற்கு வந்து, உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு உடனே தூங்க செல்கிறார்கள். மேலும், வீட்டில் இருக்கும் மனைவியும் அன்றாட வேலைகளை செய்து சோர்வாக இருப்பாள்.
இத்தகைய சூழ்நிலையில் , அவர்களின் பாலியல் வாழ்க்கை நாளுக்கு நாள் தூரமாக செல்கின்றது. சொல்லப்போனால் வெறுப்பாக கூட மாறுகிறது. இப்படி வழக்கமாக வாழும் ஒரு மனிதன் உடலுறவுக்கு பிறகும் உடனே சோர்வடைந்து விடுகிறான்.ஆனால், நீங்கள் இரவில் உடலுறவில் ஈடுபடுவதற்கு பதிலாக, காலையில் கொள்வது மிகவும் நல்லது. அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் ரொம்பவே நல்லது என்றே சொல்லலாம். இப்படி காலையில் உடலுறவு கொள்வதன் மூலம் ஆற்றல் நிறைந்து இருக்கும் மற்றும் இருவரும் ஒருவரையொருவர் சிறந்த முறையில் திருப்திப்படுத்த முடியும்.
2. இரத்த ஓட்டம் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கும்:
அதிகாலையில் உடலுறவு கொள்வது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. உதாரணமாக, அந்நாள் முழுவதும் நீங்கள் கவலை இல்லாமல் இருப்பீர்கள். அதே நேரத்தில் குளிர் காலத்தில் காலை உடலுறவு வைப்பது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்தம் வேகமாக பாயும். நீங்கள், ஆரோக்கியமாக இருக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், காலையில் உடலுறவு
கொள்ளும்போது உங்கள் உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அபாயத்தை குறைக்கும்.
இதையும் படிங்க: இந்த நேரத்தில் செக்ஸ் வைப்பது தான்.. ஆண்களுக்கு ரொம்ப சந்தோஷம் தரும் தெரியுமா?
3. விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்:
ஆண்களின் விந்து எண்ணிக்கை அதிகரிக்க, காலையில் உடலுறவு கொள்வது மிகவும் நன்மை பயக்கும். எப்படியெனில், காலையில் உடலுறவு கொள்ளும் போது, உடலானது முழு ஆற்றலுடன் நிறைந்து இருக்கும். இதனால் விந்து எண்ணிக்கை நிறைய உற்பத்தி அடைகின்றன. மேலும், காலையில் உடலுறவு விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அதன் தரத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடும் பெண்களுக்கு காலை உடலுறவு கர்ப்பத்திற்கு உதவும் என்று ஆராய்ச்சி சொல்லுகின்றது.
4. சரும பிரச்சனைகளுக்கு தீர்வு:
காலையில் உடலுறவு கொள்வது உங்களை மன ஆரோக்கியத்தில் இருந்து விடுவிக்கிறது மற்றும் அதன் நேரடி விளைவு உங்கள் தோலில் பாதிக்கும். அதாவது, பல நேரங்களில் மன அழுத்தம் உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், காலையில் உடலுறவில் கொண்டால், உங்களை புத்துணர்ச்சி அடைய செய்கிறது மற்றும் உங்கள் முகம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
5. நல்ல ஹார்மோனை வெளியிடும்:
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்குறியில் உற்பத்தி செய்யப்படும் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். அதாவது இது தாடி மீசை போன்றவை ஆண்களுக்கு வளர்வதற்கு இந்த ஹார்மோன் தான் காரணம். மேலும் காலை உடல் உறவின்போது இந்த ஹார்மோன் மிக வேகமாக உருவாகிறது. இதன் காரணமாக ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. இதனால் உங்கள் துணைக்கு முழு இன்பத்தையும் கொடுக்க முடியும்.
6. மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்கள்:
ஆராய்ச்சி ஒன்றின் படி, காலையில் உடலுறவின்போது ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு நபரின் மன அழுத்தத்தை குறிக்க முக்கிய காரணமாகும். உடலுறவின் போது நீங்கள் எந்த பிரச்சினையில் இருந்தும் அல்லது கவலையிலிருந்தும் முற்றிலும் விடுபடுவதற்கும், திருப்தி அடைவதற்கும் நிம்மதியாக இருப்பதற்கும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D