சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். ஆனால் அதை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், அது கருவில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா..?
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு முந்தைய அல்லது தற்காலிக நீரிழிவு நோய்,ல் இருக்கும் போது அதனை சரியாக கவனிக்கப்படாவிட்டால், அது தாய் மற்றும் குழந்தைக்கு சில மோசமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு.இப்போது, நாம் இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
பிறப்பு குறைபாடுகள்:
ஒரு கர்ப்பிணிப் பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அவளது இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவளது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக மூளை, முதுகுதண்டு வடம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் பிறக்கும்போதே ஏற்படும்.
undefined
குழந்தையின் அளவு இயல்பை விட பெரியது:
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் சரியாக கவனிக்கப்படாவிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தை தேவையான அளவுக்கு அதிகமான சர்க்கரை கிடைப்பதால், குழந்தை மூன்றாவது மாதத்திலேயே அதிகப்படியான அளவுக்கு வளரும். இதனால் வயிற்று பெரிதாகவே காணப்படும். இதனால், பிரசவ சமயத்தில், திறமையான மருத்துவர்களுக்கு கூட பிரசவம் பார்ப்பது சவாலாக இருக்கும். சுக பிரசவம் சாத்தியமற்றது. மேலும், பிரசவத்தின்போது தோள்பட்டையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, குழந்தை நரம்புகள் பாதிக்கப்பட்டு பிறக்கலாம்.
சிசேரியன் பிரசவம்:
பொதுவாகவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் தான் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்தப் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண் குணமடைய நீண்ட காலம் எடுக்கும்.
உயர் இரத்த அழுத்தம்:
சர்க்கரை நோயால், கர்ப்பிணிப் பெண்கள் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதம் மற்றும் சில சமயங்களில் விரல்கள் மற்றும் கால்விரல்கள் வீக்கத்தை அனுபவிக்கிறார்கள். இது ஒரு தீவிரமான பிரச்சனை என்பதால், கர்ப்பத்திற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கு தகுந்த மாதிரி சிகிச்சை அளிக்க வேண்டும்.
வலிப்பு அல்லது பக்கவாதம்:
சில சந்தர்ப்பங்களில், நீரிழிவு நோயால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது வலிப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முன்கூட்டிய பிறப்பு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், மூளையில் ரத்தக் கசிவு, குடல் கோளாறுகள், பார்வைக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு முன்கூட்டியே பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இரத்த சர்க்கரை அளவு குறைவு:
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் அல்லது மருந்துகளை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக இருக்கும். அதற்கு உடனே சரியான சிகிச்சை செய்யாவிட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்ணின் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, பிரசவத்திற்குப் பிறகு குழந்தையின் இரத்த சர்க்கரை அளவும் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த குழந்தைகள் பல மணி நேரம் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது.
கருச்சிதைவு அல்லது இறந்த பிறப்பு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்கும். இது அதிகமாகவே நடக்கும். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்!!