Saree Care Tips : பட்டு புடவை மற்றும் காட்டன் புடவையை நீண்ட நாள் இருக்க அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பெண்கள் அனைவரும் விரும்பி அணியும் ஆடை புடவை தான். அதுவும் பட்டுப் புடவை என்றால் சொல்லவே வேண்டாம். அதை அவர்கள் அவ்வளவு விரும்பிய அணிவார்கள். பொதுவாகவே, பட்டுப்புடவை என்றாலே அது அதிக விலையில் தான். முக்கியமாக இது மற்ற புடவைகளைப் போல் அல்லாமல் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டிலேயே பட்டுப்புடவை இப்படி துவைங்க.. சாயம் போகாது; இனி டிரை கிளீன் வேண்டாம்..!!
undefined
பட்டுப்புடவை பராமரிக்கும் முறை:
நீங்கள் பட்டுப்புடவையை உடுத்துவிட்டு வெளியில் சென்று வந்தால், உடனே அதை அப்படியே சுற்றி வைக்காமல், விரித்து காற்றில் காய வைக்கவும். அப்போதுதான் அதில் இருக்கும் வியர்வை துர்நாற்றம் வெளியேறும். பிறகு அதை நீங்கள் மடித்து வெளியில் கொடுத்து துவைக்கவும். ஒருவேளை உங்களுக்கு துவைக்க தெரிந்தால், நீங்களே துவைக்கலாம். இல்லையெனில், வெளியில் கொடுப்பதே நல்லது. காரணம், நீங்கள் துவைக்க தெரியாமல் துவைத்தால் பட்டுப் புடவையில் இருக்கும் ஜரிகை சேதாரம் அடையும். முக்கியமாக பட்டுப்புடவையை ஒருபோதும் வாஷிங்மெஷினில் போட்டு துவைக்க கூடாது.
அதுபோல, பட்டுப்புடவையை பிற துணிகளோடு ஒருபோதும் மடித்து வைக்கக் கூடாது. மேலும் பட்டுப் புடவை மடித்து ஒரு மஸ்கின் துணியில் அல்லது பையில் வைத்து பீரோவில் வைக்க வேண்டும். முக்கியமாக, பட்டுப்புடவையை அடிக்கடி எடுத்து அதை மாற்றி மாற்றி மடித்து வைக்கவும். பட்டுப் புடவை ஒரே மடிப்பில் ரொம்ப நாள் இருந்தால், அதன் மடிப்பு அப்படியே அதில் பதிந்து விடும்.
இதையும் படிங்க: Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!
காட்டன் புடவை பராமரிக்கும் முறை:
காட்டன் புடவையை நீங்கள் உடுத்திய பிறகு அதை பிற துணிகளோடு சேர்த்து ஒருபோதும் துவைக்கவே கூடாது. அதை எப்போதும் தனியாக தான் துவைக்க வேண்டும். அதுபோல காட்டன் புடவையை நீண்ட நேரம் வாஷிங் பவுடரில் ஊற வைக்கவே கூடாது. அப்படி ஊற வைத்தால் புடவையில் சாயம் மங்கி போய்விடும். ஒருவேளை நீங்கள் உடுத்திய காட்டன் புடவையில் அழுக்கு ஏதும் இல்லையெனில், அதை அப்படியே தண்ணீரில் மட்டும் நனைத்து பிறகு காயப் போடுங்கள். முக்கியமாக காட்டன் புடவையை வெயிலில் ஒருபோதும் காய வைக்கவே கூடாது அதை எப்போதும் நிழலில் தான் காய வைக்க வேண்டும். மேலும் காட்டன் புடவைகளை ஒருபோதும் வாஷிங் மிஷினில் துவைக்க கூடாது. நீங்கள் காட்டன் புடவையை துவைத்த பிறகு அதை அயன் செய்துவிட்டு பிறகு அதை ஹேங்கரில் மாட்டி தொங்க விடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D