அம்மாக்களே கவனிங்க..! மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை பராமரிக்க சில டிப்ஸ் இதோ!!

By Kalai Selvi  |  First Published Aug 24, 2024, 11:19 AM IST

Parenting Tips : மழைக்காலத்தில் பிறந்த குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளது. எனவே, அவர்களே பாதுகாப்பாக வைக்க, பராமரிப்பது எப்படி என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.


 

மழைக்காலம் தொடங்கியவுடனே குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பிற நோய்கள் தாக்கும். குறிப்பாக, இந்த விஷயத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், காலநிலை மாற்றம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். எனவே, புதிதாகப் பிறந்த குழந்தைகளை மழைக்காலத்தில், குறிப்பாக மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

மழைக்காலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்க சில டிப்ஸ் இங்கே : 

1. ஆடைகளில் கவனம் தேவை :

மழை காலத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எப்போதும் அடுக்கு ஆடைகளை அணியுங்கள். கால் சட்டை, முழுக் கை சட்டை, மேல் ஜாக்கெட் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அணியுங்கள். முக்கியமாக குழந்தையின் தலையை தொப்பியால் மூடி வைக்கவும்.

2. குழந்தையின் படுக்கையை சுத்தமாக வைக்கவும் :

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் படுக்கை அறையை சுத்தமாக வைத்திருங்கள். அதுபோல மழை காலத்தில் காற்றில் குழந்தைகளை அதிகமாக வெளியே கொண்டு செல்லாதீர்கள்.

இதையும் படிங்க:  பிறந்த குழந்தைக்கு எப்போது ஆயில் மசாஜ் செய்ய ஸ்டார்ட் பண்ணலாம்?!

3. குழந்தையின்றை சூடாக இருக்கவும் :

வீட்டின் சுழல் மிகவும் குளிராக இருந்தால் குழந்தைக்கு சளி, இருமல் பிரச்சனை உண்டாகும். எனவே, புதிதாக பிறந்தவர்களின் குழந்தையின் அறை 23 முதல் 25 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்.

4. தாய்ப்பால் கொடுப்பது நிறுத்த வேண்டாம் :

குழந்தைக்கு குறைந்தது ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். எனவே, ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பதை ஒரு பொது நிறுத்த வேண்டாம்.

இதையும் படிங்க:  Parenting Tips : பிறந்த குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வந்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க நின்றுவிடும்!

5. தடுப்பூசி போடுங்கள் :

குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் தடுப்பூசி போட வேண்டும். குறிப்பாக, மருத்துவர்கள் வழங்கிய அட்டவணைப்படி தடுப்பூசி போடவும். இது குழந்தையின் வளர்ச்சியின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறிக்கிறது.

6. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள் :

குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே, வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படாமல் இருக்க, தினமும் நல்ல மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். குறிப்பாக குளிர்காலத்தில் இரண்டு முறை ஈரப்பதம் மூட்டும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.

7. எண்ணெய் மசாஜ் அவசியம் :

மழை காலத்தில் சருமம் வறண்டு போவதால், குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் பேபி ஆயில், தேங்காய் எண்ணெய், ஆலிவ்வெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். சுமார் அரை மணி நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இது குழந்தையின் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!