Vaagai Flower Benefits : நடிகர் விஜய்யின் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள வாகை பூவின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
வாகை மரம் பழங்காலத்தில் இருந்து தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றிய மரமாக விளங்குகிறது. இந்த மரமானது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையான காற்றை நமக்கு தருகிறது மற்றும் மன்னருப்பை தடுக்கிறது. குறிப்பாக, இந்த மரம் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது ஆகும். முக்கியமாக, இந்த மரம் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், நாற்காலி, மேசை போன்ற மர சாமான்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. வாகை மரத்தின் இலை, பூ, பட்டை காய் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மரத்தின் பூவானது இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் பூவில் அதிகளவு நன்மைகள் உள்ளது. இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
வாகை பூவின் நன்மைகள்:
வாகைப்பூ கண் நோய்களை குணமாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, கண்ணில் ஏற்படும் எரிச்சல், வறட்சி, நீர் வடிதல், பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். இதற்கு வாகை பூவில் செய்த தேநீரை குடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த தேநீரானது வாதம், பித்தம் போன்றவற்றையும் சரி செய்யவும், உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளை குணமாக்கவும், உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் பயன்படுகிறது.
வாகி மலர்கள் அல்லது மொட்டுக்கள் இவற்றுடன் மிளகாய் பொடி செய்து பிறகு அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பாதி அளவு வந்ததும் ஆற வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் கை கால் வலி போன்ற பிரச்சினைகள் குணமாகும். மேலும் உடலில் சேர்ந்த விஷயங்களும் முறிந்து விடும். சொல்ல போனால், இது விஷக்கடிக்கு சிறந்த மருந்தாகும்.
வாகி பூவின் இலைகளை அரைத்து கண்ணில் கட்டி கொண்டால் கண் வீக்கம் சிவத்து போதல் வழி போன்ற பிரச்சனைகள் சுலபமாக குறையும்.
சூடான தண்ணீரில் வாகைப்பூ மொட்டு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றி அதில் வாகை இலை பூவை அரைத்து அதில் போட்டு வேகவைத்து, பிறகு ஆற வைத்து பற்றாக போட்டு வந்தால் மூட்டு வலி, கை கால் வலி குறையும்.
வாகைமரத்தின் வேர் பட்டைகளை நன்கு பொடியாக்கி அதில் பல் துலக்கி வந்தால் ஈறு பிரச்சனைகள் குணமடையும்.