Blood Tests : வருடத்திற்கு ஒரு முறை ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய 5 ரத்த பரிசோதனைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா.. இல்லையா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் எளிதாக தெரிந்து கொள்கிறோம். பெரும்பாலான நேரங்களில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ள ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்வது வழக்கம். காரணம் நம் உடல் முழுவதும் ரத்தம் பாய்கிறது. ஒருவேளை உடலில் ஏதேனும் உறுப்பில் கோளாறு ஏற்பட்டால், அது ரத்தத்தையும் பாதிக்கும்.
அதுமட்டுமின்றி, நாம் சில ரத்த சோதனை பரிசோதனைகளை அவ்வப்போது செய்தால் எதிர்காலத்தில் ஏற்படும் நோய்களின் அபாயத்தை எளிதில் தவிர்க்க முடியும். அதிலும் குறிப்பாக, ஆண்கள் 25-30 பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக ரத்த பரிசோதனையை செய்வது மிகவும் அவசியம்.
எனவே, ஆண்களே நீங்கள் உங்களது ஒரு ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் கண்டிப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த 5 ரத்த பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறையாவது செய்யுங்கள். அப்போதுதான் ஏதேனும் நோய்கள் கண்டறியப்பட்ட அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் மற்றும் அதை சுலபமாக தடுக்கவும் முடியும்.
இதையும் படிங்க: Heart Attack: சைலண்ட்டாக வரும் ஹார்ட் அட்டாக்.. யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு? அறிகுறி என்ன?
வருடத்திற்கு ஒருமுறை ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய 5 ரத்த பரிசோதனைகள் :
1. வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 பரிசோதனை :
ஒரு அறிக்கையின் படி, வைட்டமின் பி12 உடலில் இருக்கும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். அதுமட்டுமின்றி, செல்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் டிஎன்ஏ-வை உருவாக்குகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக தான், நரம்புகள் பலவீனமடைகிறது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படுகிறது.
அதுபோல, வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக, எலும்புகள் பலவீனமடையும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் மற்றும் உடலின் செயல்பாட்டை மோசமாக பதிக்கும். எனவே, கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
2. சர்க்கரையின் அளவு :
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சொல்லப் போனால், நம் நாட்டில் சுமார் 10 கோடிக்கு மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று கூட தெரியாமல் பலர் இருக்கிறார்கள். ஆகையால், 25 வயதை கடந்த ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக வருடத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: மனித உடலுக்குள் ஒளிந்திருக்கும் அறியப்படாத அதிசயங்கள்! புரியாத புதிர்கள்!!
3. வளர்ச்சிதை மாற்ற பரிசோதனை :
இந்த பரிசோதனையானது, உடலுக்கு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுகிறது என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை கண்டிப்பாக அவசியம். ஏனெனில், இது சிறுநீரகம், கல்லீரல் சர்க்கரை அளவு, எலெக்ட்ரோலைட்டுகள் போன்றவற்றை காட்டும்.
4. இதய பரிசோதனை :
இன்றைய காலத்தில் பலர், நடக்கும் போது, பேசும்போது, விளையாடும் போது, வேலை செய்யும் போது, அல்லது சும்மா ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தால் கூட திடீரென சரிந்து விழுந்து இறந்து விடுகிறார்கள். காரணம் மாரடைப்பு தான். எனவே, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது இதே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை செய்து கொண்டால் உங்கள் ரத்தத்தில் எவ்வளவு கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும், அவற்றை சுலபமாக கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம். இந்தக் கெட்ட கொலஸ்ட்ரால் தான் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகிறது.
5. கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு சோதனை :
நம் உடலில் இருக்கும் கல்லீரல், உடலில் வெவ்வேறு செயல்பாடுகளை செய்கிறது மேலும் இது பல்வேறு நொதிகளையும் வெளியிடுகிறது. எனவே கல்லீரல் சோதனை செய்தால் உடலில் நடக்கும் எல்லாவற்றையும் கண்டறிந்து விடலாம். அதுபோல சிறுநீரகத்தின் திறன் என்ன? அது ஆரோக்கியமாக அல்லது பலவீனமடைந்து இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுநீரக பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். குறிப்பாக 25 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனை செய்ய வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D