புற்றுநோயால் உயிருக்கு போராடும் ஹரிணி பிழைக்க உதவுங்கள்

 
Published : Nov 13, 2017, 04:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
புற்றுநோயால் உயிருக்கு போராடும் ஹரிணி பிழைக்க உதவுங்கள்

சுருக்கம்

Help harini to get treatment for cancer

என் மகள் உயிர் பிழைக்க உதவுங்கள்

மகளின் உயிர் காக்க நிதிவேண்டும்

எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசையோடு துள்ளி துள்ளி விளையாடி வந்த என்னுடைய ஒரே ஒரு தங்க மகள் தான் ஹரிணி.9 வயதே ஆன என் மகள் தற்போது மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறாள்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வரும் என் மகளுக்கு இன்று வரை தெரியாது “அவளுக்கு ரத்த புற்று நோய் உள்ளது என்று..”

என் மகள் மருந்து எடுத்துகொள்ளும் போதெல்லாம் ஒரு கேள்வியை கேட்பாள்....அம்மா எதற்காக எனக்கு இந்த மருந்துகள் என்று....அவள் கேட்கும் இந்த கேள்விக்கு தயக்கத்துடன்  நான் கூறும் ஒரே பதில் இதுதான்.... 

“ஹரிணி உனக்கு காய்ச்சல் இருந்தது அல்லவா...அதற்காகத்தான் இந்த மருந்துகள். அதுமட்டுமல்ல இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால், உனக்கு எப்போதும் பிடித்தமான   கூந்தல் மிக விரைவில் நீளமாக வளரும் தெரியுமா..? என அவள் சற்று சந்தோஷப்படும் அளவிற்கு சொல்வேன்...

ஹரிணிக்கு நீண்ட முடி என்பது மிகவும் பிடித்தமான ஒன்று, ஒரு முறை என்னுடைய  புகைப்படத்தை பார்க்கும் போது,” எனக்கும் இதே போல நீளமான கூந்தல் வேண்டும் என ஆசையாக கூறுவது வழக்கம்..ஆனால் இன்று என் மகள் ரத்த புற்றுநோயால் பாதிக்கபட்டு, அதிக முடி உதிர்வை சந்தித்து வருகிறாள்....

சிகிச்சையாக 22 முறை கீமோதெரபி எடுத்தபின்,சற்றே தேறி உள்ள என் மகளுக்கு  மேலும் 8 சிட்டிங் கீமோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....

ஆனால் கடைசியாக என் கையில் உள்ளதோ..வெறும் 10 ரூபாய் தான்....

என் மகளுக்கு வாழ்வு கொடுக்க உதவுங்கள் 

நான் ஹரிணியோட அம்மா ஜெனிபர்.என் கணவர் கால்டாக்சி ஓட்டுனர். நாங்கள் பெங்களூரில் வசித்து வருகிறோம்.எங்களுக்கு  தற்போது உள்ள ஒரே சொத்து எங்கள் மகள் ஹரிணி தான்.ஹரிணிக்கு ரத்த புற்று நோய்  என்பதால் அவளுடைய சிகிச்சைக்காக இதுவரை எங்களால் முயன்ற அனைத்து வழியிலும் முயற்சி செய்து 14 லட்சம் வரை செலவு செய்து விட்டோம்.என் கணவரின் மாத வருமானமான 8 ஆயிரத்தை கூட பெற முடியாத நிலை என் கணவருக்கு ஏற்பட்டு உள்ளது.ஹரிணியை பார்த்துக்கொள்வதிலும்,அவளை காப்பாற்ற தேவையான பணத்தை பெறுவதற்கு நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம்.

தற்போது வேறு வழியின்றி உயிருக்கு போராடும் என் மகளுக்காக முகம் தெரியாத அன்பு நெஞ்சங்களான உங்களிடம் கையேந்தி உள்ளேன்....

கடந்த ஏப்ரல் மாதம் ஹரிணிக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் இருமல்  காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது தான் எங்களுக்கு தெரிய வந்தது ஹரிணிக்கு ரத்த புற்றுநோய் உள்ளதென.....அன்று முதல் இன்று வரை எங்கள் கண் முன்னே மகள் ஹரிணி துன்புறுவதை பார்த்து பார்த்து வலியில் துடித்து வருகிறோம்.....

எங்களுக்கு எல்லாமே எங்கள் மகள் தான்....மகளின் உயிரை காப்பாற்ற பணத்திற்காக  போராடி வரும் எங்களுக்கு...வேறு வழியின்றி முகம் தெரியாத உங்களிடம் உதவி கேட்பதில் மனம் சற்று தயங்கினாலும் வேறுவழியில்லாமல் உங்களிடம் பண உதவி  கேட்கிறேன்...  உயிர் காக்க உதவுங்கள்

மயக்க மருந்து கொடுத்து கூட என் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வறுமையில்  வாடுவதால்,அதனால் ஏற்படும் 8 ஆயிரம் ரூபாய் செலவை மிச்சப்படுத்தி, ஹரிணியின் மார்பக பகுதியில் இரண்டு குழாய் மூலமாக மருந்துகள் உட்செலுத்தப்பட்டு வருகிறது..

ஒவ்வொரு முறையும் கீமோதெரபி கொடுக்கும் போது RS 49,400  செலவாகிறது..மருந்தின் அளவோ 5 ML மட்டும் தான் ....

அடுத்த கீமோதெரபிக்கு செல்வதற்கு எங்களிடம் கொஞ்சம் கூட பணம் இல்லாமல் மகளின்  உயிரை காக்க ஊசலாடி வருகிறோம்....

ஹரிணி சிகிச்சை பெற முடியுமா என்பது எங்கள் வலியை படித்து வரும் உங்கள்  கையில் தான் உள்ளது...என் மகளுக்கு சிகிச்சை கிடைக்குமா?

ஜெனிபருக்கு உதவ நினைத்தால் KETTO  மூலமாக தங்களால் இயன்றதை செலுத்தலாம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்